பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126 திருக்குறள் பிறருக்கு உபகாரம் பண்ணாத வுடம்பை விடுகிறதே நல்ல தென்பதாம். II. ஆக அதிகாரம் உயடிக்குக் குறள் உகய இப்பால் 24. புகழ் என்பது, இல்வாட்கை முதலாக ஈகை இறுதியாகச் சொல்லப் பட்ட இல்லறத்தின் வழுவாதார்க்கு இம்மைப் பயனாகவே. உலகத்திலே விளங்கப்பட்ட கீர்த்தி என்பதாம். கீர்த்தி பெரியோர்களால் கொண்டாடப் பெறுவது. 231, ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்ல தூதியம் இல்லை உயிர்க்கு என்பது தான் தேடிய பொருளை அதிதி, யதி, புத்திரர் தருமம் முதலான வற்றிற்குக் கொடுத்துக் கீர்த்தியுடனே வாழ்கிறது மனுஷ ஜீவன்களுக்குப் பலனாம் என்றவாறு. அப்படி யில்லாவிட்டால் தருமத்துரோகமாய் இலாபமும் இல்லாது போகும் என்றவாறு. குறிப்பு: மேலே கூறப்பட்ட உரை முழுவதும் அடிக்கப் பட்டு தரித்திர ரான பேருக்குப் பொருளைக் கொடுத்துக் கீர்த்தி யுடனே வாழ்கிறது மனுஷ ஜீவன்களுக்குப் பலனாகிறது. அதல் லாமல் பேறொன்றில்லை என்றவாறு' என்று எழுதப் பட்டுள்ளது. தி 232. உரைப்பார் உரைப்பவை எல்லாம் இரப்பார்க்கொன் றிவார்மேல் நிற்கும் புகழ் என்பது லோகத்தார் சொல்லுகிற சொல் லெல்லாந் தரித்திரரா யிருக் கிற பேருக்கு அவர் கேட்ட பொருளைக் கொடுக்கிறவர்களுக்கே 1. அதிதிபுத்திரர்களுக்கு - என்பது அச்சு நூல் 2. இல்வாழ்க்கை என்க