பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 3G திருக்குறள் நெருப்பிலே நெய் முதலானவைகளை வார்த்து ஆயிரம் ஒமம் பண்ணினாலும் ஒரு சீவனைக் கொன்று அதனுடலைத் தின்னாம லிருக்கிறதே நன்மை என்றவாறு. அந்த யாகங்களாலே வருகிற பலனிலும் கொல்லாத விரதத் தினாலே வருகிற பலன் அதிகம் என்பதாம். ੇ। 260. கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி எல்லா வுயிரும் தொழும் என்பது சிவனையும் கொல்லாதவனாய் மாங்கிசங்களைத் தின்னாதே என்ற ஜினனைச் சகலமான சீவன்களும் கைகுவித்துத்தோத் திரம் பண்ணும் என்றவாறு. கொல்லாத தும் தின்னாதது மாகிய இரண்டு விரதங் களுடையவர்களுக்கல்லது ஒன்றினாற் பலனில்லை; இந்த விரத முடையவன் மறுப்பிறப்பிலே தேவர்களைப் பார்க்கிலும் பெரிய சித்தனாம்’ என்பதாம். (குறிப்பு: கோடிட்ட இடங்களில்(1) 'தின்னாதவனை' என்றும் (2) பெரியவனாம் என்றும் காகிதச் சுவடியில் அடித்து எழுதப்பட்டுள்ளன.1 Ꭰ ஆச அதிகாரம் உயசுக்குக்குறள் உள சுய. இப்பால் 27. தவம் என்பது, இந்திரியங்களின் வழியே மனசு போகாமல் நிற் கிறத்துக்காக விரதங்களாலே பொசிக்கிற வஸ்துக்களைக் குறைச்சுக் கோடைக்காலத்திலே வெய்யிலிலே நின்றும், மழைக் காலத்திலே மரத்தின் கீழே நின்றும் தவஞ்செய்தும், பனிக்காலத் திலே தண்ணிர்க்கரையிலே நின்றும் இது முதலான விரதங்களைக் 1. கர்மநிர்மூல்ம் செய்கையினால் ஜிநன் எனப்படுவர்; ஜெயிப்பவன் என்பது பொருள் (பக் 110, திருக்குறள் ஆராய்ச்சி) 2. நிற்கிறதற்கா. 3. புசிக்கிற 4. குறைத்துக் க. பர்வதங்களின்மேல்