பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஜைன உரை LI ) லாவது கேட்டையோ அல்லது சாக்காட்டையோ அடையப் போகும் ஒரு சீவன் அச் சொற்களின் பொய்ம்மையாலே அத னின் நீங்கி யின்புறுதல். 2– (குறிப்பு * இக்குறியிடப்பட்டதினின்றுள்ளவை பின் வருமாறு மாற்றி எழுதப்பட்டுள்ளன : அதனைச் செய்கிற வழி பொய்யான வார்த்தையும் மெய் யாம் என்பது. அறமாவது கொல்லாதது ; சத்தியம் திறம்பாமல் இருக்கிறது. பரஸ்திரீகளை வாஞ்சியாமலிருக்கிறது! கோபமும் லோபமும் இல்லாமலிருக்கிறது; இதுவே தர்மம். இதனைச் செய் கிற வழி பொய்யான வார்த்தையும் மெய்யான வார்த்தையும் மெய்யாமென்பதாம். 2. 2 9 3 . தன்னெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின் தன்னெஞ்சே தன்னைச் சுடும் என்பது ஒருவன் தன் நெஞ்சு அறிந்தவற்றைப் பிறர் அறியார்கள் என்று பொய் சொல்ல வேண்டாம்; பொய் சொன்னால் அதனை அறிந்த தன் நெஞ்சே தன்னைச் சுடும் என்றவாறு. தன்னைச் சுடுதலாவது. அசத்தியம் சொன்ன தோஷத்தி னால் நரக துக்கங்களை அனுபவிக்கிறபோது நெஞ்சு கூட நின்று அனுபவிக்கும் என்பதாம். АF_ 2.94. உள்ளத்தாற் பொய்யா தொழுகி னுலகத்தார் உள்ளத்து ளெல்லா முளன் என்பது ஒருவன் தன் மனத்திற் கேற்கப் பொய்யாம லிருந்தானா கில் அவன் பெரியோர்கள் மனசுகளிலே எல்லாம் இருப்பான் என்றவாறு பெரியோர்கள் அவன் பொய் சொல்லாத படியினாலே அந்த அருமையைப் பார்த்து அவனை நினைப்பார்கள் என்றவாறு அ