பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

14 திருக்குறள்

ஏழுசெய்யுட்களில் அருக சரணமும், "கோளில் பொறியில்" என்ற குறளில் சித்த சரணமும், "பொறிவாயிலைந்தவித்தான்" என்ற குறளில் சாது சரணமும், "அறவாழியந்தணன்" என்ற குறளில் தர்ம சரணமும் அமைந்துள்ளன என்பர். (தி. ஆ. பக். 135) எனினும் கவிராஜ பண்டிதருரை (அச்சு நூல்) கடவுள் வாழ்த்து 10 ஆம் குறளுரை விளக்கவுரையில் இந்நூலைப் பதிப்பித்தவர்கள்.

"கடவுள் வாழ்த்து என்னும் அதிகாரத்துள் அருக சரணமும் சித்த சரணமும் அடங்கியுள்ளன வென்றும், நீத்தார் பெருமை யென்னும் அதிகாரத்துள் சாது சரணமும், அறன் வலியுறுத்தல் என்னும் அதிகாரத்துள் தரும சரணமும் கூறப்படுள்ளன என்றும் ஜைன சமயப் பெரியோர் கூறுவர்" - என்று எழுதியமை ஈண்டுக் கவனிக்கத்தக்கதாகும்.

ஆசார்ய ஶ்ரீ குந்த குந்தர், ‘தசபக்தி’ என்ற பிராகிருத நூலுள் நான்கு சரணங்களை (மங்கலகரமான பொருள்களைக்) கூறியிருக்கிறார். அவை சத்தாரி மங்களம் எனப் பெறும். சத்தாரி மங்களம் ஆவன அரண்ந்த மங்களம்: சித்த மங்களம்: சாது மங்களம், கேபலிபண்ணத்தோ தம்மோ மங்களம் என்பனவாம்.

என் பாவம் நீங்க அருகனைத் தொழுகிறேன்
என் பாவம் நீங்கச் சித்தனைத் தொழுகிறேன்
என் பாவம் நீங்க முனிவர்களைத் தொழுகிறேன்
என் பாவம் நீங்க அறிவன் உரைத்த அறத்தைத் தொழு கிறேன்.”*

என்பதும் அது. அந்த நான்கு மங்களங்கள்: அருகன், சித்தன், முனிவர் (சாது); அறம் (தர்மம்) என்பனவாம். இந்நான்கும் உலகத்தில் உத்தமமானவை என்றும் கூறப்பெறும்.

அருகர் சித்தர் ஆகியோர் உயர்ந்தவர்கள். இவர்களைப் ‘பரமேட்டி’ என்பர். எவர் இல்லறம் துறந்து துறவறம் ஏற்றுத் தன் சாதனை மூலமாக நான்கு காதி வினைகளை நீக்கி, அநந்த சதுட்டயம் (அநந்த தரிசனம், அனந்த ஞானம், அனந்த சுகம்,


  • பகவதி ஜயராமன் - திருக்குறள் வழங்கும் செய்தி பக்கம் 84