பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 9 O திருக்குறள் 39.8. ஒருமைக்கட் டான்கற்ற கல்வி யொருவர்க்' கெழுமையு மேமாப் புடைத்து என்பது ஒருவனுக்குத் தான் ஒரு பிறப்பிலே கற்ற கல்வியேயெழு பிறப்பினுஞ் சென்று உதவுமென்றவாறு. எழுபிறப்பிலே யு முதவுகிறதாவது, ஒரு சன்மத்திலே கற்ற கல்வியினாலே யறிவு பிறந்து அந்த அறிவினாலே புண்ணியத் தைப் பண்ணுவன்; அதனாலே நற்கெதியுண்டாம்; அந்தக் கெதி யிலேயும் நல்லறிவு பிறக்கும், மென் மேலும் நல்லகெதியே வரு மென் பதாம். اہلئے’’ 399. தாமின் புறுவ துலகின் புறக்கண்டு காமுறுவர் கற்றறிந் தார் என்பது தாங்க ளின்பத்தை யடைதற் கேதுவாய கல்வியைக் கண்டு உலகத்தா ரின்புறுவர்கள்: சந்தோஷப் படுகிறத்தைக் கண்டு கற்றறிந்தார் மென்மேலுங் கற்க விரும்புவ ரென்றவாறு. தாங்க ளின்புறுதலாவது, சொல்லினுடைய பொருளை யறிந்து சந்தோஷப் படுகிறதும், இம்மையிலே கீர்த்தியும் திரவிய மும் வெகுமானமும் அடைகிறதும், மறுமையிலே மோட்சமடை கிறது.மாம். உலகத்தா ரின்புறுதலாவது, கற்றறிந்தவர்களுடனே கூடி யறியாதன வெல்லாமறிந்து சந்தோஷப்படுகிறது. அFச 400. கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்கு மாடல்ல மற்றை யவை என்பது ஒருவனுக்கு அழிவில்லாத செல்வமாகிறது கல்வியே, இதல்லாத மணியும் பொன்னு முதலான வெல்லாம் செல்வமல்ல வெ ன்ற வாறு. 1. யொருவற் என்பதே சரியான பாடம். 2. படுகிறதை து