பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஜைன உரை

19

பத்து — உத்தமக்ஷமை முதலாகிய பத்துத் தருமங்கள். அவை யாவன: 1. உத்தம க்ஷமை: 2. உத்தம மார்த்தவம், 3. உத்தம ஆர்ஜவம்; 4. உத்தம சத்தியம்: 5. உத்தம சவுசம், 6. உத்தம சம்யமம் 7. உத்தம தபசு 8. உத்தம ஆகிஞ் சண்யம், 9. உத்த மதியாகம்; 10. உத்தம பிரமசரியம். இவை முறையே 1. பொறையுடைமை; 2. மென்மை; 3. செம்மை, 4. மெய்ம்மை; 5. நன்மை, 6. அடக்கம்; 7. தவம்: 8. ஒன்றின்மை, 9. துறத்தல் 10. திறம்பாமை என்பனவாம். (விளக்கம் அச்சு நூல் பக்கம் 16-17 காண்க) இந்தப்பத்தினையே திறக்குறளாசிரியர் கொண்டிருக்க வேண்டும் என்பது, ஜைநருடைய அழுத்தமான நம்பிக்கையாகும்.

இவ்வதிகாரத்தின் ஐந்தாவது குறள்,

“ஐந்தவித்தா னாற்றல் அகல் விசும்புளார் கோமான்
இந்திரனே சாலுங்கரி”

என்பதாகும். இக்குறள் “முற்றுந் துறந்த மகாமுனிவர்கள் ஐம்புலன்களையு மடக்கித் தவஞ்செய்து சாதிகர்மங்களைக் கெடுத்துக் கேவல ஞானத்தை யடைந்ததின் பெருமையை அவதி ஞானத்தாலறிந்த இந்திரன் அவர்க்குக் கந்தகுடி என்னும் ஜிநாலயத்தை நிர்மித்துக் கொடுத்ததைக் குறித்தது என்பதையும், ஆசிரியர் நீத்தார் பெருமையில் முனிவர் அடைந்த கேவல ஞானத்தின் உயர்வை உணர்த்தற்கு இந்திரன் சாக்ஷியாவான் எனக் கூறினார் என்பதையும் விளக்கும்” (தி.ஆ பக்-195)

பஞ்சேந்திரியங்களையும் ஜெயித்தவனைத் தேவேந்திரன் முதலிய தேவர்கள் பூமிக்கு வந்து ஸமவ ஸரண மண்டலம் அமைப்பித்து வணங்கி அவனுக்குச் சிறப்புச் செய்கிறார்கள் என்பது ஜைன சமயக் கொள்கை. இங்ஙனம் இந்திராதி தேவர்கள் கேவலபூசை செய்தற்கு வருதலை,

ஆயிரங் கண்ணினானை யதிபதியாகச் சூழ்ந்து மாயிரு விசும்பும் மண்ணும் மறைய வானவர்கள் வந்தார்,

எனவும்,