பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/213

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஜைன உரை 2 I I மையின், காவலில்லாத ராசாவானவனைக் கெடுப்பாரொருவரு மில்லாவிட்டாலுந் தானே கெட்டுப்போவனென்றவாறு. தானே கெடுதலாவது பாகனில்லாத யானை போல நெறியல்லாத நெறிச்சென்று கெடும் என்பதாம். அ 449. முதலிலார்க் கூதிய மில்லை மதலையாஞ் சார்பிலார்க் கில்லை நிலை என்பது முதற் பொருளாகிய கையிருப்பில்லாத பேர்க்கு அதனாற் படைக்கப்பட்ட லாப மில்லாதது போலத் தம்மைத் தாங்கு வதாகிய துணைகள் இல்லாத போது ராசாக்களுக்கு ஒரு பொருளும் நிலையில்லா தென்றவாறு. முதற் பொருளாகிய பணங் காசு கையிலிருந்தே லாபம் பெற வேண்டுமாறு போலத் தாங்குபவராகிய பெரியோர் களிருந்தே அரசாளுகிறது நிலை பெற வேண்டுமென்பதாம். நிலைபெறலாவது, அரச பாரத்தோடு சலியாது நிற்றல் , 450. பல்லார் பகைகொள லிற் பத்தடுத்த தீமைத்தே நல்லார் தொடர்கை விடல் வான்பது தான் தனியனாய்ப் பலபேர்களுடனும் பகையா யிருக்கிறத் திலும் பத்தத்தனை பொல்லாதாம், பெரியாரோடு நட்புக் கொள்ளா தொழித லென்றவாறு. பலபேர்கள் பகையாயிருந்தாலும் தான் பெலவா னானால் வப்படியாகிலும் பிழைத்தல் கூடும். நல்லாராகிய பெரியோர்கள் ேெனகத்தை விட்டுவிட்டால் எந்த விதத்திலும் பிழைத்தல் கூடாது. ஆனபடியினாலே அந்தப் பகையைப் பார்க்க இது பத்தத்தனை பொல்லா தென்றார். ஆகவே பெரியோராகிய பெtகளுடனே சினேகம் பண்ணுகிறதே ஒரு காலத்திலும் அழியாத பொருளென்பதாம். ஆக அதிகாரம் ச0டுக்குக்குறள் சளடுச) 1. இருக்கிறதிலும்