பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/227

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஜைன உரை 2.25 பொருளிருந்த மட்டும் சிலவுபண்ணி அப்புறம் இல்லாமற் போய்விட்டால் முன் படைத்த கீர்த்தியும் ஒன்று மில்லாமற்போ மென்பதாம். பொருளை வளரவைத்து வரவறிந்து சிலவு பண்ண வேணு மென்பதாம். ஆக அதிகாரம் ச0 அக்குக்குறள் சள அல் இப்பால் 49. காலமறிதல் என்பது. பெலத்தினாலே யதிகமான ராசா பகைவர் மேற் செல்லுமிடத்து அதற்கேற்ற காலமறிந்து செய்யவேணுமென்ப தாம். 481. பகல்வெல்லுங் கூகையைக் காக்கை பிகல்வெல்லும் வேந்தர்க்கு வேண்டும் பொழுது என்பது தன்னிலுமதிக பெலத்தையுடைய கோட்டானைக் காக்கை பகலிலே வெல்லும்; ஆனபடியினாலே பகைவரை வெல்ல நினைக் கிறவர்களுக்கு அதற்கான காலம் வந்தாலொழிய வெல்லப் போகாதென்றவாறு. காலமாவது, வெய்யிலுங்குளிரும் சரியாய் வியாதிவராம லிருக்கவும் தண்ணிரும் உணவு முதலியன உடையதாய்ச் சேனை வருந்தாமல் இருக்கிறதாங் காலம். அல்லாவிட்டால் சேனை யாலே பிரயோசனமில்லையென்பது. தி 48.2. பருவத்தோ டொட்ட வொழுகல் திருவினைத் திராமை ஆர்க்கும் கயிறு என்பது அரசன் காலத்தொடு பொருந்தக் காரியஞ்செய்கிறது ஒரு வரிடத்திலும் நில்லாத செல்வத்தைத் தன்னை விட்டு நீங்காமற் கட்டப்பட்ட கயிறா மென்றவாறு. காலத்தொடுபொருந்துதல், காலம் தப்பாமற் செய்தல்,