பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/243

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஜைன உரை 24. I 521 பற்றற்ற கண்ணும் பழமை பாராட்டுதல் சுற்றத்தார் கண்ணே யுள என்பது ஒருவன் செல்வம் தொலைந்து போய்த் தரித்திரனான போதும், விடாமற் பழமையைப் பாராட்டு மியல்பு, சுற்றத்தா ரிடத்திலே யுண்டென்றவாறு. பழமையாவது, முன் தமக்குச் செய்த நன்றி, அதனை நினைந்து அவன் தரித்திரனான போதும் விடாமலுபகாரஞ் செய்வர் சுற்றத்தார் என்பதாம். அ 522. விருப்பறாச் சுற்ற மியையி னருப்பறா வாக்கம் பலவுந் தரும் என்பது ஒருவனுக்கு அன்பறாத சுற்றம் வந்தெய்து மாயினவனுக்குப் பெருக்கமறாத செல்வங்கள் பலவற்றையுங் கொடுக்கு மென்ற வாறு. உட்பகையை நீக்கு தற்குத் தன் மேலாசை யறாத சுற்ற முண்டாக வேணும்; அப்படி உட்பகையை நீக்கினால் பெரிய செல்வம் வந்தெய்து மென்பதாம். -- 623. அளவளா வில்லாதான் வாழ்க்கை குளவளாக் கோடின்றி நீர் நிறைந் தற்று என்பது ஆசையறாத சுற்றத்தாருடனே சினேக மில்லாதவன் வாட்கை. குளவிசாலங் கரையில்லாது தண்ணிர் நிறைந்தாப் போலே யென்றவாறு. சுற்றமில்லாதவன் செல்வங் கரையில்லாத குளத்திலே நீர் போலே நாலு வழியும் புறப்பட்டுப் போமென்பதாம். WFi 1. துலைந்து என்று காகிதச் சுவடியில் உள்ளது. 1. வாழ்க்கை குளவிசாலம் - குளம்பரப்பு 2. நிறைந்தாற்போலே