பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/272

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

270 திருக்குறள் ஒருவனுக்கு அறிவு மிகுத்ததே பொருளாவது: அந்தப் பொரு ளில்லாதார் மனுஷராகார்; மரங்களோ டொப்பர். வடிவு மாத் திரமே யல்லாமல் லறிவு பேதமில்லை யென்றவாறு. மனுஷ யாக்கைக் கேற்ற அறிவில்லாத படியினாலே மர மென்றும், மரத்திற்குள்ள பலனில்லாத படியினாலே வேற்று மனுஷரென்றும் சொல்லப்பட்டது. Ꭷ ஆக அதிகாரம் சுடுக்குக்குறள் சுள இப்பால் 61. மடியின்மை என்பது நினைத்த காரியங்களைச் செய்கிற போது சோம்பறை" யாயிராமல் திடமாயிருக்குறது." 601. குடியென்னுங் குன்றா விளக்கம் மடியென்னு மாசூர மாய்ந்து விடும் எ ன்பது ஒருவன் தான் பிறந்த குடியென்னப்பட்ட விளக்குத் தன்னிடத் திலே மடியென்னப் பட்ட சோம்பறையாகிய இருள் வந்தடைய நந்திக் கெட்டுப் போ மென்றவாறு. ஒருவன் உலகத்துக் கேற்க நடக்கிற காலமெல்லாம் தன் வம்சம்” பிரகாசமா யிருக்கும்; உலக வியற்கை தப்ப நடந்தால் அவன் வம்சம் பிரகாச மில்லாமற் கெட்டுப்போ மென்றவாறு. அது 6.02. மடியை மடியா வொழுகல் குடியைக் குடியாக வேண்டு பவர் என்பது தான் பிறந்த குடியை மெத்த மெத்த அதிகமாகச் செய்ய வேண்டினவன் மடியைக் கெட்டுப் போக நடக்க வேணு மென்றவாறு. 3. வங்சம் என்று சுவடியிலுள்ளது . மடிய என்பது அச்சு நூல் பாடம்.