பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/283

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஜைன உரை 28. I இப்படிச் செய்தால் முடியு மென்பதும், அதனாற் பெறும் பலனும் அறிந்து செய்கிறவனே மந்திரியாவா னென்றவாறு. 632. வன்கண் குடிகாத்தல் கற்றறித லான்வினையோ டைந்துடன் மாண்ட தமைச்சு என்பது ஒரு காரியஞ் செய்யுமிடத்திலே சலியாமலிருக்கிறதும் குடி களை ரட்சித்தலும், நீதி நூல்களைக் கற்றுச் செய்வன தவிர்வன அறிதலும், உற்சாகமும், கருவி” காலஞ் செய்கை முடிவு பல னென்று சொல்லப்பட்ட வைந்துடனே கூடிச் செய்யவல்லவனே யமைச்சன் என்றவாறு. உ 633. பிரித்தலும் பேணிக் கொளலும் பிரிந்தார்ப் பொருத்தலும் வல்ல தமைச்சு என்பது பகை வந்த காலத்திலே பகைவர்க்குத் துணை யாயினாரைப் பிரித்தலும், தன் மனுஷ்ரைப் போக வொட்டாமல் பிரியஞ் சொல்லி நிறுத்திக் கொள்ளுகிறதும், முன்னே தன் ராசாவை விட்டுப் பிரிந்துபோனவரைக் கூட்ட வேண்டிற் கூட்ட வல்லவனு மானவனே மந்திரி யென்றவாறு. 634. தெரிதலுந் தேர்ந்து செயலு மொருதலையாச் சொல்லலும் வல்ல தமைச்சு என்பது ஒரு காரியஞ் செய்ய வேண்டின பொழுது பலவகையாலோ சனை தோன்றினால், அதிலே’ ஆகத்தக்க தாராய்ந் தறிகிறதும், அது செய்கிற போது அதனால் வருகிற பலனை யறிந்து செய் கிறது.ப. ஒருத்தரைப் பிரிக்கிறத்தினாலேயும் அவர்களுக்குத் o 1. ஆள்வினை என்பதற்கு இங்கு உற்சாகம் என்று பொருள் தரப்பட் டுள்ளது. 2. கருவி என்றவிடத்து அச்சு நாலில் தானையும் பொருளும்' ான்றுள்ளது; 631 ஆம் குறள் சிறப்புரையில் பரிமேலழகர் இவ்வனம் கறி யுள்ளார். 3. 'செய்கை முடிவு' என்ற விடத்து அச்சு நூலில் செய்யுமாறு ான்றுளது. 4. அவற்றுள் 5. பிரிக்கிறதிலேயும் கூட்டுகிறதிலேயும்-அச்சுநூல்