பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/305

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஜைன உரை 303 செய்தொழுகின் தன் குற்றம் கண்டு செய்தனவாகக் கருதுவ ரென்பதாம். அா 6.95. எப்பொருளு மோரார் தொடரார்மற் றப்பொருளை விட்டக்கால் கேட்க மறை என்பது ராசா வொருவனுடனே ரகசியஞ் சொன்னால் அதைக் காது கொடுத்துக் கேளாமலும், அவனை யதட்டிக்கொள்ளாமலும்'. இருக்க வேணும்; அவன் தானே சொன்னானாகிற் கேட்கலா மென்றவாறு. டு 696. குறிப்பறிந்து காலங் கருதி வெறுப்பில வேண்டுப வேட்பச் சொலல் என்பது அரசனுக்குக் காரியஞ் சொல்லும் பொழுது, அவன் குறிப்பை யறிந்து சொல்லுகிறத்துக்கு ஏற்ற காலம் பார்த்து, வெறுப் பில்லாததாய்’ வேண்டுவது மாயிருக்கிற காரியங்களை அரசன் விருப்பமாய்க் கேழ்க்கும்" வகையாற் சொல்லுக வென்ற வாறு குறிப்பறிதலாவது, காமங் கோபம் இதுகள்" மேலே நினை வாயிருக்கையிலே சொன்னாற் பயனில்லை யென்பதாம் சின் 697. வேட்பன சொல்லி வினையில வெஞ்ஞான்றுங் கேட்பினுஞ் சொல்லா விடல் ான்பது பலன் பெரியதாய் அரசன் விரும்புவனவு மாய காரியங் களை யவன் கேளா விட்டாலும் சொல்லவேணும்; பலனில்லாத காரியங்களை யரசன் கேட்டாலும் சொல்லாமல் விட வேணு மென்றவாறு. а Г 1. முடுகிக் கேளாமலும் அச்சு நூல் 2. சொல்லுகிற தற்கு 3. வெறுப் பில்லனவும், 4 வேண்டுவனவு அச்சு நூல் க. கேட்கும் 6. இவை