பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/320

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3.18 திருக்குற ள் 737. இருபுனலும் வாய்ந்த மலையும் வருபுனலும் வல்லரணும் நாட்டிற் குறுப்பு என்பது கீழ்நீர் மேனி ரென்னப்பட்ட தண்ணிர்களும், வாய்ப்பான மலையும், மலையினின்று வரப்பட்ட அருவியானும் நல்ல அரணாகிய காவலு முடையது நாட்டிற்கு அவயவம மென்ற வாறு. கீழ்நீராவது, துரவு கிணறு மேனிரானது. ஏரிகுளம் வரு புனலாவது ஆறுகயம் இதுகள்’ உண்டானால் மழையில்லாத காலத்திலேயும் வளமை குன்றாமல் விளையு மென்பதாம். எ 738. பிணியின்மை செல்வம் விளைவின்ப மேமம் அணியென்ப நாட்டிற்கிவ் வைந்து என்பது வியாதி யில்லாமையும் செல்வமுடைமையும் விளைவும் நல்ல ருசிகளையுடைய வஸ்த்துக்களும் நல்ல காவலு மென்னப் பட்ட இவ்வைந்தும் நாட்டிற்கு ஆபரணமா மென்றவாறு نشے | 739. நாடென்ப நாடா வளத்தன நாடல்ல நாட வளந்தரு நாடு என்பது நாட்டிலே யிருக்கிறவர்கள் தேடிவருந்தாமல் செல்வம் அடைவிக்கிறத்தையே பெரியோர்கள் நாடென்று சொல்லு வார்கள்: தேடிவருந்தச் செல்வ மடைவிக்கிறது’ நாடல்ல வென்றவாறு. 740. ஆங்கமை வெய்தியக் கண்னும் பயமின்றே வேந்தமை வில்லாத நாடு என்பது 1. கயம் அச்சுநூலில்லை 2. இவைகள் 3. அடை விக்கிாதையே 4. அடைவிக்கிற நாடுகள்-அச்சுநூல்கள்