பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

32

திருக்குறள்

உரனென்னும் என்ற 24 ஆம் குறள் கூறும். “ஒருமையுள் ஆமைபோல்” என்ற 126 ஆம் குறளும், “அடல்வேண்டும்” என்ற 343 ஆம் குறளும் இதற்கு மேற்கோளாம்.

ஆதிபகவன் ஷட்கர்மத் தொழில்களைச் செய்யுமாறு பணித்தார் என்று மகாபுராணம் கூறும். அந்த ஆறு தொழில்களாவன, அஸி ஆயுதம் தாங்குகிற தொழில்): மஷி (எழுத்தெழுதும் தொழில்): கிருஷி (உழுதுபயிரிடுதல்); (வைத்தியம் முதலிய) வித்தை; வாணிஜ்யம் (வாணிகம்); சிற்பம் (பல தொழில்கள்) என்பனவாம். அஸியாவது அரசியல் ஆகும். மஷியாவது கல்வி: கல்விகல்லாமை ஆகிய அதிகாரங்களிற் காணலாம்; கிருஷி பற்றியதே உழவு என்ற அதிகாரம்: மருந்து முதலியன வித்தை; வாணிகம்-தனியதிகாரம் இன்றேனும்.

“வாணிகஞ் செய்வார்க்கு வாணிகம் பேணிப்
பிறவும் தமபோற் செயின்” (120)

- என்ற குறள்

இதற்கு எடுத்துக்காட்டு. சில்பம் ஆவது ஆள்வினையுடைமை, தெரிந்து செயல் வகை, வினைசெயல் வகை முதலியவற்றான் அறியப்படும். (தி. ஆ. பக்கம் 48).

சம்யத்தரிசனம் அடைந்த எதிகள் மோக்ஷம் அடைவார்கள் என்பதும், ஆன்றோர் சங்கை முதலிய 25 குற்றங்களும் நீங்கி நிச்சங்கை முதலிய எட்டு அங்கங்களை யுடையவர் என்பதும் ஜைன சமயக் கோட்பாடுகளில் ஒன்றாகும். இது மெய்யுணர்தல் என்ற 36 ஆவது அதிகாரத்தில் இரண்டாவது பாடல் நன்கு விளக்குவதாகக் கவிராஜ பண்டிதர் கருதுகிறார். (இக்குறட்குரிய குறிப்புரையையும் காண்க) (குறள் 352).

தயா மூலதன்மம் - எவ்வுயிர்க்கும் அன்பா யிருத்தல் - ஜைனத்தின் மூலதர்மம் ஆகும். இதனை விளக்க - வற்புறுத்த எழுந்த அதிகாரங்கள் - அன்புடைமை, இனியவை கூறல், இன்னா செய்யாமை, முதலியவையாம்.

கொல்லாமை யென்னும் அறம் - உயிர்கட்குச் செந்தண்மை பூண்டொழுகும் செம்மையறம் - உலகில் நிலவுதல் வேண்டும்