பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/346

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

344 திருக்குறள் பழையதான சினேகிதர் கெடும்வகை செய்யா ரென்பது கருத்து.' ro, | 互” 806. எல்லைக்க ணின்றார் துறவார் தொலைவிடத்தும் தொல்லைக்க ணின்றார் தொடர்பு என்பது சினேகம் வேண்டியிருக்கிற பேர், பழையவர்களாயிருக்கிற சினேகிதர், சினேகம் விட்டுப் போறோம்? என்றாலும் போக வொட்டாமல் நிறுத்திக் கொள்ளுவார்கள் என்றவாறு. பழையவர்களாயிருக்கிறவர் நட்பை விட்டாற் கெடுவ ரென்பதாம். ליד 807. அழிவந்த செய்யினு மன்பறா ரன்பின் வழிவந்த கேண்மை யவர் என்பது தன்னுடைய சினேகிதர் தனக்கு அழிவு வரத்தக்க காரியங் களைச் செய்தாலும் அறிவுடையவர்கள் அவர்கள் சினேகம் விடார்களென்றவாறு. பழையதாய் வந்த சினேகிதர் செய்த குற்றத்தை ப் பொறுக்க வேணு மென்பதாம். c М 808. கேளிழுக்கங் கேளாக் கெழுதகைமை வல்லார்க்கு நாளிழுக்க நட்டார் செயின் என்பது சினேகிதர் செய்த குற்றத்தைத் தாங்கள் கானா விட்டாலும் பிறர் சொன்னாலும் கேளாம லிருக்கத்திக்கவர் களுக்கு அவர் குற்றஞ் செய்த நாள்களும் நன்மை செய்த நாள்களோடு ஒக்கும் என்றவாறு. 1. இந்த வாக்கியம் அச்சுநூலில் இல்லை. 2. போகிறோம் *முதல் * வரை : தாங்களேயன்றிப்பிறர் சொன்னாலும் கொள்ளாத உரிமை அறிய வல்லவர்களுக்கு - அச்சுநூல் (பரிமேலழகருரை) 3. செய்தவர்களோடு என்பது காகிதச் சுவடி (திருத்தம் அச்சு நூல்)