பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/353

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஜைன உரை 351 825. மனத்தி னமையா தவரை யெனைத்தொன்றுஞ் சொல்லினாற் றேறற்பாற் றன்று என்பது மனதிலே யுறவு கலவாதவரை யாதொரு காரியத்தினுஞ் சொல்லினாலே தெளிகிறது முறைமையல்ல" வென்றவாறு. மனதிலே பகையா யிருக்கிறவர்கள் சொல்லுகிற வார்த் தையை மெய்யென்று நம்ப வேண்டா மென்பதாம். டு 8. நட்டார்போ னல்லவை சொல்லினு மொட்டார்சொ லொல்லை யுணரப் படும். என்பது உறவின் முறையாரைப் போலே நல்ல வசனங்களைச் சொன்னாலும், பகைவர் வார்த்தைகளை மெய்யென்று நம்பப் போகா தென்றவாறு. அவர் சொல் சொன்னபடியே செய்யாகிறத்தை அந்தட் சனத்திலே யறியப்படு மென்பதாம். يrr 827. சொல்வனக்க மொன்னார்கட் கொள்ளற்க வில்வனக்கம் தீங்கு குறித்தமை யான் என்பது வில்லினது வணக்கம் எதிர்த்தவர்களுக்குத் தீங்கு செய்யும், அதுபோலப் பகைவர் சொல்லுஞ் சொல்லினுடைய வணக் கத்தையும் நமக்கு நன்மை செய்யு மென்றெண்ண வேண்டா மென்றவாறு. பகைவர் வணங்குகிறது தீங்கு செய்ய வென்று அஞ்சிக் காக்க வேண்டு மென்பதாம். a ! 828. தொழுதகை யுள்ளும் படையொடுங்கு மொன்ாைர் அழுதகண் னிரு மனைத்து என்பது 1. மனத்தினாலே; 2. முறைமைத்தன்று-அச்சு நூல் 3. செய்யாதா கிறதை 4 . அந்த கடினத்திலே