பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/379

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஜைன உரை ვ 7 7 896. எரியாற் சுடப்படினு முய்வுண்டா முய்யார் பெரியார்ப் பிழைத்தொழுகு வார் என்பது காட்டுக்குள்ளே போனவன் ஒருவன் காடு பத்திக்' கொண்டு சுடப்பட்டாலும் ஒருவகையாலே தப்பிப் பிழைக் கலாம்; தவசினாலே பெரியவர்களுக்குக் கோபம் வரத்தக்கதாக டந்த வர்கள், எந்த விதத்தினாலேயும் பிழைக்க மாட்டார்கள் என்றவாறு. தீச்சுட்டால் மருந்துகளினாலே யாற்றலாம்; பெரியோர்கள் கோபிச்சுக் கொண்டால் அதை யொருவராலும் மாற்றப்’ போகாது; அந்தக் கோபத்தினாலே பொல்லாங்கு வரச் செய்தவன் கெடுவனென்பதாம். تهrr 897 வகைமாண்ட வாழ்க்கையும் வான்பொருளு மென்றாம் தகைமாண்ட தக்கார் செறின் என்பது சாபானுக்கிரக சமர்த்தராகிய தபசிகள் ராசாவைக் கோபிச்ச காலத்தில் ராசாவினுடைய வுறுப்பும் அவன் ராச்சியமும் அவன் தேடிவைத்த பெரும் பொருளும் என்ன பிரயோசனமாம்; ஒரு பிரயோசனமும் ஆகாமல் விருதாவாய்க் கெட்டுப்போ மென்றவாறு. உறுப்பாவது, நாடு அரண் படை அமைச்சர் முதலானவை. அரசன் அயிசுவரிய கெருவத்தினாலே அருந்தவர் மாட்டுப் பிழை செய்தால், அவர்கள் கோபத்தினாலே அரசன் செல்வ மெல்லாம் வெந்து விடுமென்பதாம். இT 898. குன்றன்ாைர் குன்ற மதிப்பிற் குடியொடு நின்றன்னார் மாய்வர் நிலத்து என்பது 1. பற்றிக் 2. அடப்-அச்சு நூல் 3. சோபித்து * . ஆற்றப்-அச்சுதுங் டி. ாேபித்த 6. கோபித்தால்-அச்.நால்