உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/410

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4.08 திருக்குறள் 982. குணநலஞ் சான்றோர் நலனே பிறநலம் எந்நலத் துள்ளது.உ மன்று என்பது சான்றோர் நலமாவது குணங்களா லாகிய நலமே! நலம் இதல்லாமல் அவயவங்கள் நலமும் செல்வநலமும் நலமல்ல வென்றவாறு. அவையவ நலமுஞ் செல்வ தலமும் உண்டாயிருந்தும் குண நல மில்லா விட்டால் ஒரு பிரயோசனமுமில்லை யென்பதாம். -- 983 அன்புநா னொப்புரவு கண்ணோட்டம் வாய்மையோ டைந்துசால் பூன்றிய துண் என்பது எல்லாரிடத்திலேயுந் தயையா யிருக்கிற தும், பழிபாவங் களுக்கும் பயப்படுகிறதும், எல்லாருக்கு முபகாரம்பண்ணு கிறதும், பழையவர்கள் மேலே சினேகம் விடாமலிருக்கிறதும், எப்போதும் மெய் சொல்லுகிறதும், இந்த அஞ்சும்’ ’சால்பு என்கிற பாரத்தைத் தாங்குகிற துண்களாம் என்றவாறு. இந்த ஐந்து குணங்களும் இல்லாதவர்” சான்றோ ரென்னப்பட ரென்பதர்ம். i. கூட 984 கொல்லா நலத்தது நோன்மை பிறர் தீமை சொல்லா நலத்தது சால்பு என்பது நோன்பாவது ஒரு சீவனையுங் கொல்லாமலிருக்கிறதாம்; அதல்லாமல் மற்றது” எல்லாம் நோன்பல்ல; இதுபோல் பிற ருடைய குற்றங்களைச் சொல்லாமலிருக்கிறதே சால்பென்ப தென்றவாறு. நோன்புக்குக் கொல்லாத விரதம் பெரியதானாற்போலப் 1. ஐந்தும் *முதல் *வரை: அச்சுநூலிற்கண்டெழுதியவை 2. அதல்லாத மற்றவை-அச்சுநூல்