பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/462

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



460

திருக்குறள்

இப்படி மெத்தென்ற பாதம், கடினமாகிய தரையிலேயும் கல்லிலேயும் நடக்கமாட்டாது என்பதாம்.

[1]ஆக அதிகாரம் ளகஉக்குக்குறள் சதளஉ௰

இப்பால் 113. காதற் சிறப்புரைத்தல்

என்பது, தலைமகன் தன் காதல் மிகுதி கூறலும் தலைமகள் தன் காதல் மிகுதி கூறலுமாம்.

1121. பாலொடு தேன்கலந் தற்றே பணிமொழி

வாலெயி றூறிய நீர்

என்பது, இயற்கைப்புணர்ச்சியினுடைய கடைசியிலே தலைமகன் தன் நயப்பு[2] உணர்த்தியது.

மெத்தென்ற வார்த்தையையுடைய இந்த ஸ்திரீயினுடைய வாலிய[3] பல்லிலே ஊறி வருகிற வாய்நீர் பாலுந் தேனுங் கலந்தாற் போலும் என்றவாறு.

அதிகமாகிய தித்திப்பையுடையது என்பதாம்.

1122. உடம்பொ டுயிரிடை யென்ன மற்றன்ன

மடந்தையொ டெம்மிடை நட்பு

என்பது, பிரிந்து போகப் பயப்பட்டவன் சொல்லுகிறது:

உடம்புக்கும் உயிருக்கும் உறவு எத்தனையுண்டோ அத்தனை யுண்டு, இந்த ஸ்திரீக்கு மெனக்கும் உறவு என்றவாறு.

உடம்புமுயிருங்கூடி யின்பங்களை யனுபவிக்கிறாற்போல, இந்த ஸ்திரீயும் நானும் கூடிச் சுகமனுபவித்தோம்; இவளை விட்டுப் பிரிய மாட்டேன் என்பதாம்.


  1. இங்ஙனம் வேறொருவரால் நூல்முடிவுரை சுவடியிலெழுதப்பட்டுள்ளது (அச்சுஉரையில் இல்லை.)
  2. அன்பு
  3. வெண்மையான