பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/479

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஜைன உரை

477

தெப்பமாவது நாயகிக்கு நாயகனும், நாயகனுக்கு நாயகியும்.

1165. துப்பி னெவனாவர் மற்கொல் துயர்வரவு

நட்பினு ளாற்று பவர்

என்பது, தூது விடாதது கண்டு தோழியொடு புலந்து சொல்லியது:

இன்பமான காரியத்தைச் செய்வதற்கு உரிய சினேகிதரிடத்திலே துன்பமான பொல்லாங்கைச் செய்யவல்லவர்கள், துன்பஞ் செய்வதற்கு உரிய பகைவரிடத்திலே என்ன செய்வார்களோ என்றவாறு.

தனக்கு உறவாயிருக்கையிலேயும் தன் வாதையைக் கண்டும் தூதனுப்பாமல் இருக்கிறவள், தனக்குப் பகையானால் என்ன செய்வாளோ என்பதாம்.

1166. இன்பங் கடன் மற்றுக் காமம் அஃதடுங்கால்

துன்ப மதனிற் பெரிது

என்பது, காமத்தினால் இன்பமுற்றவர்களுக்கு அதனினாய துன்பமும் வரும் என்ற தோழிக்குச் சொல்லியது:

காமம் புணர்வால் இன்பஞ் செய்கிறது கடல் போலப் பெரிதாயிருக்கும்; அந்தக் காமமே புணராமற் பிரிந்தால் அதனாலே வருகிற துக்கம் அந்த இன்பக் கடலினும் பெரிய கடலாயிருக்கும் என்றவாறு.

1167. காமக் கடும்புன னீந்திக் கரைகாணேன்

யாமத்தும் யானே யுளேன்

என்பது, காமக் கடல் நீந்தப்படும் என்றாட்குச் சொல்லியது:

காமமாகிய கடலை நீந்தாமல் இருக்க வில்லை; நீந்தியும் அதற்குக் கரை காணேன்; அதற்குக் கரைகாணாக் காலம் எல்லாரும் நித்திரை பண்ணுகிற அரையிருள்; அப்பாதி ராத்திரி