பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/519

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



ஜைன உரை

517

நாயகனை யான் காணும் பொழுது அவன் குற்றங்களைக் காணேன்; அவனைக் காணாத போது அவன் செய்த குற்றங்களைக் காண்கிறதே யல்லாமல் வேறொன்றையும் காணேன் என்றவாறு.

1287. உய்த்த லறிந்து புனல்பாய் பவரேபோல்

பொய்த்த லறிந்தென் புலந்து

என்பது இதுவுமது.

தம்மை இழுத்துக்கொண்டு போகிறது அறிந்து வைத்து ஒடுகின்ற தண்ணிரிலே நீஞ்சு[1] கிறவர்கள் செயல்போலப் பிணக்கு முடிவு போகாமை யறிந்துவைத்து நாயகனோடு பிணங்கிப் பெறுகிறது என்ன என்றவாறு.

1288. இளித்தக்க இன்னா செயினுங் களித்தார்க்குக்

கள்ளற்றே கள்வநின் மார்பு

என்பது தோழி[2] தலைவனுக்குச் சொல்லியது:

வஞ்சகா! தன்னை யுண்டு களித்தார்க்கு இகழ்ச்சியைச் செய்யினும் அவரால் மேன்மேல் விரும்பப் படுவதாகிய கள்ளைப் போலும் நின்மார்பு என்பதாம்.

இன்னாதன, நாணின்மை ஒழுக்கமின்மை முதலாயின.

1289. மலரினு மெல்லிது காமம் சிலரதன்

செவ்வி தலைப்படு வார்

என்பது தலைமகன்[3] சொல்லியது:

காம வின்பம் மல்கினும் மெல்லியதாயிருக்கும்; அப்படி மெல்லி தாயிருக்கிறதை அறிந்து அதனுடைய செவ்வியைப் பெறுவார் உலகத்திலே சிலர் என்றவாறு.


  1. நீந்து
  2. தலைமகள் புணர்ச்சி விதுப்பறிந்த தோழி என்ப பரிமேலழகர்
  3. உணர்ப்பு வயின்வாரா வூடற்கண் தலைமகன் என்பர் பரிமேலழகர் குறிப்புரை காண்க)