பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/530

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



528

திருக்குறள்

1323. புலத்தலிற் புத்தேணா டுண்டோ நிலத்தொடு

நீரியைந் தன்னா ரகத்து.

என்பது இதுவுமது

நிலத்துடனே நீர் கலந்தாற்போல ஒற்றுமையுடைய காதலரிடத்திலே, பிணங்குகிறது போல நமக்கு இன்பந் தருவதொரு தேவலோகம் உண்டோ? இல்லை என்றவாறு.

1324. புல்லி விடாஅப் புலவியுட் டோன்றுமென்

னுள்ள முடைக்கும் படை

என்பது. ‘அப்புலவி இனி எதனால் நீங்கும்?’ என்றதோழிக்குத் தலைமகள் கூறியது:

காதலரைப் புல்லிக்கொண்டு பின்விடாமைக்கு ஏதுவாகிய அப்பிணக்கினிடத்திலே யுண்டாம், என்மனத்தைக் கெடுக்கும் ஆயுதம் என்றவாறு.

1325. தவறில ராயினுந் தாம்வீழ்வார் மென்றோள்

அகறலி னாங்கொன் றுடைத்து

என்பது, தலைமகன்* தன்னுள்ளே சொல்லியது;

புருஷர் தம்மிடத்திலே தப்பில்லா விட்டாலும் தப்புஉள்ளவர்கள் போலே பிணங்கப்பட்டுத் தாம்விரும்பிய ஸ்திரீகளுடைய தோள்களைக் கூடப்பெறாமல் வருந்துகிறபோதும், அவருக்கு அத்தன்மையதோரின்பம் பயத்தலுடையது என்றவாறு.

1326. உணலினு முண்ட தறலினிது காமம்

புணர்தலி னூட லினிது

என்பது இதுவுமது

சீவன்களுக்கு மேல் உண்கிறதிலும் முன்உண்டு செரிக்கிறதே சுகமாவது போலக் காமத்துக்குமேல் புணருகிறதிலும் பிணங்கி


  • தலைமகளை யூடல் நீக்கிக் கூடிய தலைமகன் கழியுவகையாய்-என்பது

பரிமேலழகர் துறைக்குறிப்பு