பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/550

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஜைன உரை

549

சொல்லும் யதியைத்தேவர்கள் துதிக்கமாட்டார்கள்; இகழ்ச்சி பண்ணுவார்கள். தன்னைத்தான் மெச்சுவது கெர்வம்; அந்தயதி நல்ல கதியும் இல்லாது கெடுவான் என்பதாம்.

235. அச்சு நூலிற் கண்ட உரை (பக்கம் 90)

அரியகேடும் சாக்காடும்வந்தாலும், இராத்திரிபோலச் சரிரமும் செல்வம் முதலியவும் நிலையில்லை யென்று சந்தோஷமாக நினைத்துப் போகிறது பெரியோர்க்கு ஆகும். ஜீவஸ்வரூபம் தவிர மற்றவைகளை நிச்சயமாக நினையார்கள் என்றவாறு.

249 சம்யக் ஞானம்—நல்லறிவு

ஆறுவிதவஸ்து—சீவன், புத்கலம், தர்மம், அதர்மம், ஆகாசம், காலம் என்பன. இவை ஷட் திரவியம் எனப்படும்.

உயிர் திரவியம். உருவம் முதலிய பண்புகள் இல்லாதது; பொருள்களை அறியும் உணர்வு இதற்குண்டு.

புற்கலம் என்பது அணுக்களின் கூட்டம். இதற்கு நிறம் மூதலான பண்புகள் உண்டு.

தன்மம் என்பது ஒராற்றல்; பொறிகளுக்குப் புலனாகாது இந்த ஆற்றலால் உயிரும் புற்கலமும் இடம்விட்டு இடம் பெயர்கின்றன.

அதன்மம் என்பதும் பொறிகளுக்குப் புலனாகாத ஆற்றல். இவ்வாற்றலால் உயிரும் புற்கலமும் ஓரிடத்தில் நிலைபெற்று நிற்க முடிகிறது.

இவ்விரண்டு திரவியங்களும் உலகமுழுவதும் எள்ளுக்குள் எண்ணெய் போல் பரவியுள்ளன.

ஆகாயம் என்ற திரவியம் உயிர் முதலான பொருள்கள் இருப்பதற்கு இடம்தருகிறது. ஆகாயம் இல்லாத இடமே யில்லை.

காலம்: பொருள்களில் ஏற்படும் வேறுபாடுகளுக்கு இந்தக் கால திரவியமே நிமித்தமாகும்.