பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஜைன உரை 75 யத்தினாலே வரும்; அந்தப் பிள்ளைகள் செய்யுற" நன்மையி னாலே இம்மையிலே கீர்த்தியும் மறுமைக் குறுதியாகிய தர்ம போதனையா மென்றவாறு. சிட 64. அமிழ்தினு மாற்ற வினிதேதம் மக்கள் சிறுகை யளாவிய கூழ் என்பது அதிக ருசியை யுடைத்தாயிருக்கிற அமிர்தத்தைப் பார்க்கிலும் மெத்த நன்றாயிருக்கும் தன் பிள்ளைகள் சிறுகையினாலே யளையப்பட்ட கூழென்றவாறு. டு 65. மக்கண்ம்ெய் தீண்ட லுடற்கின்ப மற்றவர் சொற்கேட்ட லின்பஞ் செவிக்கு என்பது ஒருவன் தன்னுடம்புக்குச் சுகமாவது தன்புத்திரருடைய சரீரத்தைத் தீண்டுகிறதே சுகம்; காதுக்கின்பமாகிறது தன் பிள்ளை சொல்லுகிற வார்த்தையைக் கேட்கிறதே யின்ப மென்றவாறு. டு 66. குழலினிதி யாழினி தென்பர்’ தம் மக்கள் மழலைசொற் கேளா தவர் என்பது தன் பிள்ளையுடைய மழலை வசநத்தைக் கேளாதவன் குழலோசை நன்றாயிருக்குது', அதிலும் நன்றாயிருக்கு மென்பான்; அந்த மழலைச் சொல்லைக் கேட்டவர்கள் குழலிசை யாழிசை முதலான தெல்லா மதுக்குச் சரியல்ல என்பதாம். ੰ 67. தந்தை மகற்காற்று நன்றி அவையத்து முந்தி யிருப்பச் செயல் என்பது 1. தம்' என்று இருத்தல்தகும் 2. 'தென்ப' என்பது பிறர் பாடம் 1. யிருக்கிறது 2. 'அதிலும்' என்பதையடுத்து 'யாழோசை’’ என்பதைச் சேர்க்க. 3. அதற்கு 4. சரியல்ல" என்பதையடுத்து " என்பர்' என்பதைச் சேர்க்க.