பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஜைன உரை 9 3 இப்பால் 13. அடக்கமுடைமை என்பது, சரீரங்களும் வசனங்களும் மனசும் பொல்லாத வழியே போகாம லடக்கிக் கொள்ளுகிறது." 121. அடக்க மமரரு ளுய்க்கு மடங்காமை யாரிரு ளுய்த்து விடும் A ன்பது ஒருவனுக்கு அடக்கமாகிய தர்மம் பிறகு தேவலோகத்திலே சேர்க்கும்; அடங்காமையாகிய பாவம் பெரிய இருளையுடைய நரகலோகத்திலே சேர்க்கு மென்றவாறு. الي 1 22 காக்க பொருளா வடக்கத்தை யாக்க மதனினு உங் கில்லை யுயிர்க்கு * என்பது - சீவன்களுக்கு அடக்கத்திலும் பெரிய செல்வமில்லை: ஆன படியினாலே அந்த அடக்கத்தை யுறுதியான பொருளாக வெண்ணி அழியாமற் காக்க வேணுமென்றவாறு 모_ J. 23. செறிவறிந்து சீர்மை பயக்கும் அறிவறிந் தாற்றி னடங்கப் பெறின் என்பது அடங்கிறதே. நமக்கு அறிவான தென்றறிந்து ஒருவன் சாத்திரத்தின் வழியே அடங்கப் படுவனாகில் அந்த அடக்கம் நல்லோரா லறியப்பட்டு அவனுக்குப் பெருமையைக் கொடுக்கு மென்றவாறு சம்சாரிக்கு அடக்க மாகிறது, மெய்வாய் கண் மூக்குச் செவி யென்று சொல்லப்பட்ட வைம்புலனும் தன்வச மாதலா லென்பது. [Fi_ அச்சு நூல் ச. வாக்கும் என்பது அச்சு நூல் 4. கொள்ளுகிற குப்தி (குப்தி பக்கம்) அச்சு நூல் 5. ஒருவனை 1. அடங்குகிறதே 2. பெறுவானாகில் 3. ஐந்தன் புலனும்