பக்கம்:திருக்குறள் கட்டுரைகள்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

42

திருக்குறள் கட்டுரைகள்


கள் மணத்திற்காக விரும்பிப் பருகக் கூடிய ஒரு பொருளும் அல்ல. அதன் வாடை வெறுப்புக்குரியது. அது சுவைக்காக விரும்பி உண்ணப்படும் பொருளும் அல்ல. அது மிகவும் புளிப்புடையது. கள்ளோ, சாராயமோ, பிறவோ, பசும்பாலைப் போல உடல் நலத்திற்கேற்ற ஒரு பொருளும் அல்ல. குடிப்போரின் குடலைப் புண்ணாக்கி, உணவைக் குறைத்து, உடலைக் குறைத்து, வாழ்நாளையுங் குறைத்து, விண்ணுக்கும் மண்ணுக்கும் விரைவில் அனுப்பி வைக்கக் கூடிய தீய பொருளே அது. அவ்விதம் இருந்தும் மக்கள் அதனை விரும்புவது ஏன்?

“குடிப்பது கடினமாக உழைக்கத் துணை செய்கிறது” என்று தொழிலாளர் சிலர் கூறுகின்றனர், இன்னும் சிலர், “உழைப்பின் களைப்பைப் போக்குகின்றது” என்று கூறுகின்றனர். மற்றும் சிலர் குடித்து உழைத்தால் உழைப்பதற்கு அதிக உற்சாகம் உண்டாகிறது” எனக் கூறுகின்றனர். இவை உண்மையா? ஆராய்வோம்.

கள்ளும் சாராயமும் மட்டுமல்ல; கஞ்சாவும் அபினும் இதன் தம்பி தங்கைகள். காபியும் டீயும் அதன் பிள்ளைகள். பீடி, சுருட்டு, சிகரெட், பொடி, புகையிலை முதலியவைகள் அதன் பேரப்பிள்ளைகள் இவை அனைத்துமே சோர்வைப் போக்கி உற்சாகத்தை அளிக்கின்றன என்று கருதப்பட்டு வருகின்றது.

உண்மை என்னவெனில், இவற்றில் எதையும் பயன்படுத்தாதவர்களுடைய நரம்புத் துடிப்பு இயற்கையாகவே இருந்து எப்போதும் ஒரே அளவாகத் துடித்துவரும். இந்த இயற்கைத் துடிப்பு நீண்டநாள் உயிர்வாழத்துணை செய்யும். இதைவிட்டு மேற்கூறியவைகளில் எதையேனும் ஒன்றைப் பயன்படுத்தினால், அது தன்னை விழுங்கியவனுடைய நாடியை, நரம்பை அதிகமாக அளவுக்குமேல் துடிக்கச் செய்கிறது. இந்தக் கெட்ட துடிப்பையே