பக்கம்:திருக்குறள் செய்திகள்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
23

குறையும்; உழைப்பவன் இழப்பு அடைகிறான்; அவன் உழைப்பைப் பதவியில் இருப்பவன் உறிஞ்சிக் கொழுத்து விடுகிறான். இது சமூக அநீதி ஆகும்.

சொல்லில் நேர்மை இருந்தால் செயலிலும் சீர்மை இருக்கும். வார்த்தை தவறுவதற்கே காரணம் உள்ளத்தில் நேர்மையாக வாழ வேண்டும் என்ற உறுதி குலைவதால் தான். எனவே மனத்தாலும், சொல்லாலும், செயலாலும் தவறாமல் இருந்தால் அவ் வாழ்வு செப்பம் உடையது என்று கூறலாம்.

வாணிபம் செய்வது, ஏனைய தொழில்களைப் போல உழைத்துப் பொருள் ஈட்டுவது ஆகும். நாணயம், நேர்மை, நம்பிக்கை இதன் உயிர்நாடிகள்; எப்படியும் பொருள் ஈட்டிக் குவிப்பதுதான் இதன் நோக்கம் என்ற தவறான கருத்து உருவாகி உள்ளது; பிறர் பொருளையும் தம் பொருள்போல் மதித்து மிகையாகக் கொடுத்தாலும் அதனை ஏற்கக் கூடாது.

நாணயம் இருக்க வேண்டும். அது வாணிகத்தில் நம்பிக்கை ஊட்டி அதனை வளர்ப்பதற்கு உதவும். மிகையாகப் பொருள் பெற்றாலும் அது நடுவுநிலைமைக்குப் பகையாகவே அமையும்.

13. அடக்கம் உடைமை

அடக்கம் உன்னிடம் அடங்கி இருந்தால், நீ உயர்ந்து காணப்படுவாய். மரிக்காமலேயே உன்னை அமரன் என்று பாராட்டுவர்; அடங்காது இருப்பது உன்னை நிறை இருளில் ஆழ்த்திவிடும்.