உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22

அடக்கம் = மனம், மொழி, மெய் களைத் தீயவழிகளில் செலுத் தாமல் இருக்கும் ஒழுக்கம், (121, 122).

அடக்கல் = ஒடுக்கல், மெய், வாய்,

கண், மூக்கு, செவி என்ற ஐம் புலன்களையும் தீய வழிகளில் போகவிடாமல்

தடுத்தல், (126). அடங்க = ஒடுங்க, (123).

அடங்கல் = மனதைப் புறவழி களில் புகவிடாமல் அறவழி யிலே நிறுத்தப் பழகுதல்,

அடங்குதல், தன் கட்டுக்குள் மனதை வசமாக்குதல், (130). அடங்க = அமைவில்லாத; அவற்றின்படி நடவாத அடங்கி ஒழுகாத, (834). அடங்காமை = மனம், மொழி, மெய்

களை அடக்காமை, {121). அடங்கியான் = அடங்கியவனது, (124); வருத்துதல், (206); கெடுத்தல், (343); தாக்குதல், போர்செய்தல், (768); கெடுத்தல், கொல்லுதல், (893).

அடல்வேண்டின் = தன்னை அழித்துக் கொள்ள விரும் பினால், (893).

அடி தாள், பாதம், (3,4,10,

208,544, 610,1120, 1279).

அடி அளந்தான் = திருமால், (610).

1குறிப்பு நாவலர் நெடுஞ் செழியன் தனது திருக்குறள் தெளவுரையில், குறளையே மாற்றி, அடி அளந்தான் என்பது சரியல்ல" என்கிறார். 'எய்தும் மடி அளந்தான் என்பதுதான் சரி' என்பது அவரது ஆய்வு. பரிமேலழக்ரை மறுக்கும் நாவலர், எம்.பி.

திருக்குறள் சொற்பொருள் சுரபி

பூரணலிங்கம் பிள்ளை, மணக் குடவர், பரிதியார், காளிங்கர் போன்ற மேதைகளையும் மறுத்துள்ளார். அடி உறைதல் = தாள்களில் வந்து

தங்குதல், (208). அடிகளுக்கு = பாதங்களுக்கு, (1120). அடிமை = அடிமையாகும் தன்மை,

(608). அடு = வெல்லும், (567); சமைத்த, (1065); காய்ச்சப் பட்ட, (1090). அடுக்கி = மேலும் மேலும், மேன்

மேலாகி, (625). அடுக்கிய = தொடர்ந்த முன் னும் பின்னுமாக வருகின்ற, (525); பலவாக அடுக்கிய, (954, 1005).

அடுக்கிய கோடி = பல கோடி,

(954, 1005). அடுங்காலை = இறக்கும்போது;

கூற்று கொல்லும் வேளை யில், (799). அடுங்கால் = துன்பஞ் செய்யும்

போது, (1165). அடுத்த - மடங்கு மடங்கான,

(450, 817). அடுத்தது - தன்னை அடுத்த

பொருள்களை, (706).

அடுத்திருந்து = தொடங்கியிருந்து,

(867).

அடுத்து = தொடர்ந்திருந்து, (621);

தொடங்கி, (867), நெருங்கி, (1030).

அடுத்துன்றும் = பக்கத்திலே அடுத்து ஊன்றுகின்ற முட்டுக் கோல் போல; நெருங்கித்

தாங்கவல்ல, (1030). அடுப = வெல்லுவர், (493).