உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 1.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

 ௧௩௨

முன்னுரை 


பார்ப்பனர்க்கு ஊட்டக் கொடுத்ததும் இன்றும் பெருங்குல மக்களிற் பலரும் தமிழ்ப் பெண்டிர்களையும் திருமணம் செய்விக்கப் பெற்ற புதுமண மகளிரையும் ஆரியப் பார்ப்பனர் நுகர்ச்சிக்கே முதலில் சில காலம் தருவதும் பழந்தமிழ்ச் சேர நாடாகிய கேரளா முதலிய சிலவிடங்களில் வழக்கமாகவும், பிறவிடங்களில் இல்லறவியல் சடங்காகவும் இருப்பதும் அறிந்துகொள்ள வேண்டுவன.

இக் கற்பு வழுநிலை தமிழப் பெண்டிர்க்கு உறுதியாக விருந்த அக்காலத்து, மேற்கூறிய ஆரியச் சிதைவொழுக்கம் தலையெடுத்துப் பரவிய பொழுதே, திருவள்ளுவப் பேராசான் தமிழப் பெண்டிரின் கற்பொழுக்க நிறைநிலையைக் காத்தொழுகல் வேண்டியும், ஆரியப்பார்ப்பனர்க்குப் பெண்டிரைத் தேவரடியார் ஆக்குதலைத் தடுத்து நிறுத்துதல்வேண்டியும், அக்காலக் குமுகச் சூழலுக் கேற்ற வகையில் இல்லறவியலில், கீழ்வருமாறு பெண்டிரொழுக்க நிலையின் மாண்பை மறைமுகமாகத் தமிழியலறம் என்னும் பெயரில் வலியுறுத்த வேண்டியிருந்தது, என்க. ஒரு நன்னெறியும் நற்பண்பும் சிதையவரும் இடத்துத்தான், அதன் வலியுறுத்தம் தேவையேயன்றி, அஃது இயல்பான விடத்து அவ்வாறு வலியுறுத்தல் தேவையில்லை என்னும் மக்கள் மனவியலை உணர்க.


★ இவ்விடத்தில், திருமணச் சடங்கின் பொழுது, ஆரியப் பார்ப்பனப் புரோகிதன் கூறும் மந்திரங்களில் இதுவும் ஒன்று.

'சோமஹ ப்ரதமோ
விவிதே கந்தர்வ
விவிதே உத்ரஹ
த்ருதியோ அக்னிஸ்டே
பதிஸ துாயஸ்தே
மனுஷ்ய ஜாஹ'

அஃதாவது, மணப் பெண்ணாகிய இவளை (புனிதம் பெறவேண்டி) முதல்நாள் சோமனும் (சந்திரனும்), அடுத்த நாள் கந்தர்வனும் (தேவரும்), அதற்கடுத்த நாள் உத்திரனும் (இவனும் ஒரு தேவன்), நான்காம் நாள் இரவு அக்னியும் (நெருப்புத் தேவன்), (நுகர்ச்சி செய்த பின்னர்), ஐந்தாம் நாள் இரவுதான் இவளை மணந்தவனாகிய கணவன் நுகரவேண்டுவது - - என்பது இதன் விரிபொருள். இதில் இன்னும் கவனிக்க வேண்டுவது, இதில் கூறப்பெற்ற நான்கு தேவர்களும் பிராமணர் வடிவிலேயே இவள் தங்கியிருக்கும் தனி அறையில் இரவுப் பொழுதில் வருவார்கள் என்றும் இதற்கு விளக்கம் சொல்லியிருப்பதுதான்.