இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
திருக்குறள் மெய்ப்பொருளுரை-பெருஞ்சித்திரனார்
196
௫௨.மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை
எனைமாட்சித் தாயினும் இல்.
52
பொருள் கோள் முறை :
- இல்லாள்கண் மனைமாட்சி இல்லாயின்
- வாழ்க்கை எனை மாட்சித்து ஆயினும் இல்.
பொழிப்புரை : இல்வாழ்க்கைத் துணையாக அமைந்த ஒருத்திக்கு (முன் சொல்லப்பெற்ற) மனையறத்திற்குரிய பெருமைமிக்க தகுதிகள் இல்லாமற் போமாயின், அவளைக் கொண்டவனுடைய வாழ்க்கை (முற்கூறிய பெருமை) வளங்கள் என்ன வகையினவாக இருப்பினும், அவை இல்லாதவை (போலவே) ஆகும்.
சில விளக்கக் குறிப்புகள் :
- 1. மனைமாட்சி - முன்குறடபாவில் கூறப்பெற்றவாறு மனைவிக்குரிய இயற்கையான பெருமைக் குணங்களும், செயல்திறன்களும், மாண் - பெருமை; மாட்சி - பெருமைக்குரிய பண்பு நலன்கள்.
- 2. எனை மாட்சித்து ஆயினும் இல் - முன் குறட்பாவில் கூறியவாறு, அவளைக் கொண்டவனுடைய வாழ்க்கை என்ன வகையான வளங்கள் கொண்டதாக இருப்பினும், அவை இல்லாத வாழ்க்கை போன்றதாகவே இருக்கும். அஃதாவது, அவை பயனற்றவையாக ஆகிவிடும்.
- 3. இல்வாழ்வானுடைய தகுதிகள், பெருமைகள் அனைத்தும், இல்லாளுடைய இயற்கைக் குணங்கள், செயல் திறன்களைக் கொண்டே பயனுள்ளவையாக இருக்கும். அவை இல்லெனில், இவையும் பயனில்லாமற்போகும் என்றார்.
௫௩.இல்லதென் இல்லவள் மாண்பானால் உள்ளதென்
- இல்லவள் மாணாக் கடை.
- இல்லவள் மாணாக் கடை.
53
பொருள் கோள் முறை :
- இல்லவள் மாண்பு ஆனால், இல்லது என்;
- இல்லவள் மாணாக்கடை உள்ளது என்.