பக்கம்:திருக்குற்றாலக் குறவஞ்சி-மூலமும் உரையும்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன் 95

கரிகூடப் பிடிதிரியுஞ் சாரலிலே ஒரு வேடன் கைவில் ஏந்தி நரிகூடக் கயிலைசென்ற திரிகூடத்

தலமகிமை நவிலக் கேளே. 10 (அவர்கள் தேடற்குமரிதாய் நின்ற பெருமான், அடியார்க்கு அருள் புரிவானாகக் கோவில் கொண்ட காட்சி தரும் பதியாதலால், அதன் சிறப்பு உரைக்க உரைக்கத் தெவிட்டாதது என்றனர். வேடன் முத்திபெற்ற வரலாறு புராணங்களுட் காண்க.) 12. நகர் வளம்

மெய்யறிவினை உடையவரான முனிவர்களும் சித்திரா நதியினுடைய மூலத்தை இன்னவிடத்தது என்று அறிய மாட்டார்கள். அதனை நான் அறிந்த வகையினைச் சிறிது சொல்வேன் கேட்பாயாக. மேன்மை பெற்றிருக்கின்ற திரிகூடத்திலே தேனருவித் துறையினிடத்தே தேவர்களும் அறியமாட்டாத இரகசியம் உடையதாக வந்து ஒரு சிவலிங்கமானது தோன்றியிருந்தது. அத்தகைய தேனருவித் துறையினைப் பற்றிச் சொல்லப்பட்ட இடமானது, எவ்விடத்தே இருக்கிறதென்று அறிய மாட்டாமல், தான் அவ்விடத்தேயிருந்து தவஞ்செய்வதற்காக வந்த அயனானவன், பலவிடங்களிலும் தேடித்தேடித்திரிந்து அலைந்தனன்.அந்தக் காலத்திலே மெளன நிலையினை எய்திய தேவனாகிய அந்த அயனுக்கு, எங்கள் இனத்தவரான கானவர்கள், பழைமை யுடைய கங்கையிருக்குமிடம் இதுவே எனக் காட்டிக் கொடுத்த ஆறே, இந்நாளிலே சிவமதுகங்கை என வழங்கப் பெறுகின்ற ஆறாகும். இராகம் - பிலஹரி தாளம் - சம்பை

கண்ணிகள் ஞானிகளும் அறியார்கள் சித்ரநதி மூலம்

நானறிந்த வகைசிறிது பேசக்கேள் அம்மே! மேன்மைபெறுந் திரிகூடத் தேனருவித் துறைக்கே மேவுமொரு சிவலிங்கந் தேவரகசியமாய்