பக்கம்:திருக்குற்றாலக் குறவஞ்சி-மூலமும் உரையும்.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன் 115

துடிக்குதென் உதடும் நாவும்

சொல்லுசொல் லெனவே வாயில் இடிக்குது குறளி அம்மே!

இனிக்குறி சொல்லக் கேளே! (இது அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம். சக்கதேவி - சக்கம்மா தேவி. குறளி - குட்டைப்பேய்.)

27. சொல்லக் கேளாய்!

அம்மையே! பெண்கள் நாயகமே! நான் குறிசொல் வதைக் கேட்பாயாக. முல்லைப் பூக்களைச் சூடிய கூந்தலையுடையவளே! இந்த நல்ல நகரிலே வாழ்கின்ற முத்துமாலையணிந்த யாவரையும் கவர்ச்சிக்கும் அழகினை யுடைய பசுங் கிளியே! நான் சொல்வதைக் கேட்பாயாக, பல்லக்கிலேறி மக்கள் செல்லுகின்ற தெருவினிடத்தே எருதுர்தியில் அமர்ந்து, அதனைச் செலுத்திக் கொண்டே, மணிகளையுடைய பாம்பணிகளைப் பூண்டிருக்கும் குற்றாலத் தரசன் பவனி வந்தான். செல்வமாக வளர்ந்த பூங்கோதையே! நீ பந்தடித்துக் கொண்டிருக்கையிலே அவனுடைய படைகளைப் பார்த்ததனால் நின் பால் தோன்றிய அச்சத்தால் ஏற்பட்ட மயக்கம் போலக் குறி தோன்றுகிறது அம்ைைமயே! இராகம் - பிலஹரி தாளம் - சாப்பு கண்ணிகள் சொல்லக்கே ளாய்குறி சொல்லக்கேளாய் - அம்மே தோகையர்க் கரசேகுறி சொல்லக் கேளாய் முல்லைப்பூங் குழலாளே நன்னகளில்வாழ் - முத்து மோகனப் பசுங்கிளியே சொல்லக் கேளாய் பல்லக்கே றுந்தெருவில் ஆனை நடத்தி - மணிப் பணியா பரணம்பூண்ட பார்த்திபன் வந்தான் செல்லப்பூங் கோதையேநீ பந்தடிக்கையில் - அவன்

சேனைகண்ட வெருட்சிபோற் காணுதே அம்மே. 4 (மோகனம் - எழிலால் பிறரை வசமாக்குகின்ற கவர்ச்சித் தன்மை. ஆனை - ஆன் + ஐ ஆனேற்றை, பணி - பாம்பு சேனை - சேனா முகமும் ஆம்) -