பக்கம்:திருக்குற்றாலக் குறவஞ்சி-மூலமும் உரையும்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 திருக்குற்றாலக் குறவஞ்சி - மூலமும் உரையும்

அகத்தியருக்கும் அவனே குருவாக விளங்கினவன். இதுபற்றியே, 'குறவஞ்சித் தமிழை அவனே எனக்கும் தந்தனன்’ என்கிறார் கவிஞர் பெருமான்)

3. சிவக்கொழுந்தை வேண்டுவோம்! திருக் குற்றாலநாதர் குறும்பலாவின் அடியிலே முளைத்து எழுந்த சுயம்புலிங்கம் ஆவர். அது குறித்துக் குறும்பலாவினைப் போற்றி, அதனை வேண்டுகிறார் கவிஞர். முதற்கண், சிவகுமாரர்களாகிய பிள்ளையாருக்கும், குமரனுக்கும் போற்றுதல் உரைத்துப் பின்னர் பெருமானுக்கு வணக்கம் கூறுகின்ற இனிமையினைக் காண்க. 'குமரர்களைப் போற்றுதலினால், அங்ங்னம் போற்றுவார் மீது அவரைப் பெற்ற தந்தையும் மகிழ்பவராவர், என்பது இதன் குறிப்புப் போலும்!

பற்பல கிளைகளாகக் கிளைத்திருக்கும் பலப் பல கொப்புகள் எல்லாம் வேதங்களின் இயல்புகளைப் பொருந்தி யவை. அக்கிளைகள் ஈன்ற களைகளெல்லாம் சிவலிங்க சொரூபமேயாகும் களைகளிலே தோன்றிய கனிகள் எல்லாம் சிவலிங்க சொரூபமேயாகும். கனிகள் ஈன்ற சுளைகள் அனைத்துமே சிவலிங்க சொரூபமாகும். சுளைகளின் உள்ளே யிருக்கும் வித்துகள் எல்லாமே சிவலிங்க சொரூபங்களாகவே விளைகின்ற ஒப்பற்ற சிவத்தன்மையினை உடையது குற் றாலத்துக் குறும்பலா மரம். அதன் கண் முளைத்தெழுந்த சிவக்கொழுந்து திருக்குற்றாலநாதர். இக் குறவஞ்சித் தமிழைப் பாடுவதற்கு அருளுமாறு, அச்சிவக் கொழுந்தையும் நாம் வேண்டுவோமாக!

வேத வேதாங்கங்கள் அனைத்துமே குறிப்பிடும் முழு முதல், அவனேயாவன். இந்த அரிய கருத்தினையே இப் பாடலுள் நயமுடன் கவிஞர் கூறுகிறார்.

கிளைகளாய்க் கிளைத்தபல கொப்பெலாம்

சதுர்வேதம் கிளைகள் ஈன்ற களையெலாம் சிவலிங்கம் கனியெலாம்

சிவலிங்கம் கனிகள் ஈன்ற