பக்கம்:திருக்குற்றாலக் குறவஞ்சி-மூலமும் உரையும்.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன் - 159

மிகுதியைப் புலப்படுத்துவதற்காகும். திரிகூடத்திலே வேட்டை யாடிய சிங்கன் அங்கே தேடிப் பார்க்காமல் பிறவிடங்களிலே எல்லாம் தேடிவிட்டுக் கடைசியிலேதான் திரிகூடத்திலே தேட வருகின்றான்.)

30. காணாமல் வருந்துதல்! மேடையாகிய குயிலுக்குக் கண்ணியை வைத்துவிட்டு நான் மாடப் புறாவுக்காகப் போனேன். மாடப் புறாவையும் குயிலையும் பிடித்துவிட்டேன், ஆனால், என் வேடிக்கைக் காரியான சிங்கியைத்தான் காண முடியாமல் தவிக்கிறேன்.

அழகிய மயிலுக்குக் கண்ணியை வைத்துவிட்டு ஆலாவைப் பிடிப்பதற்கு நான் சென்றேன். ஆலாவையும் அழகிய மயிலையும் பிடித்துவிட்டேன். ஆனால் நான் மோகங்கொண்ட சிங்கியைத்தான் காணாமல் தவிக்கிறேன்.

எனக்கு விருப்பமுள்ள பறவை வேட்டைக்குப் போய்க் காம வேட்டையான என் சிங்கியைத் தப்பிப் போகும்படி விட்டு விட்டேன். வவ்வாலைப் பிடிக்கப்போக அங்கே மரநாய் அகப்பட்ட கதையாக என் செயலும் ஆகிவிட்டதே!

இவ்வாறாகப் பெருகி வருகிற என் உள்ளத்தின் விரகதாபத்தை எப்படி நான் தீர்த்துக் கொள்வேன்? சிவந்த வாயிதழ்களையுடைய என் கரும்பை, என் ஆசைக் கொடியை என் சிங்கியைக் காண முடியவில்லையே!

இராகம் - நீலாம்பரி தாளம் - ஆதி கண்ணிகள் பேடைக் குயிலுக்குக் கண்ணியை வைத்துநான்

மாடப்புறாவுக்குப் போனேன் மாடப் புறாவும் குயிலும் படுத்தேன்

வேடிக்கைச் சிங்கியைக் காணேன். 1 கோல மயிலுக்குக் கண்ணியை வைத்துநான்

ஆலாப் படுக்கவே போனேன் ஆலாவும் கோல மயிலும் படுத்தேன்

மாலான சிங்கியைக் காணேன். 2