பக்கம்:திருக்குற்றாலக் குறவஞ்சி-மூலமும் உரையும்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன் 23

போன்றோர் அக்கன்னிமார்கள். ஆடவர் உள்ளத்தே கலகம் விளைவிக்கும் கெண்டை மீனை ஒத்த தம் விழிக்கண்களைத் தீட்டியவர்களாக அவர்கள் வருகின்றனர். புருவங்களாகிய நெடிய விற்களை வளைத்தவர்களாக அவர்கள் வருகின்றனர். 'ஆடவர்கள் எல்லாம் மயக்கங்கொள்ளுமாறு அவர்களைப் போரிட்டு வெல்வோம்’ என்று, தம் கால்களிலே விளங்கும் மாணிக்கப் பரல்களிட்ட சிலம்புகளாகிய முரசங்கள் முழக்கமிட, அவர்கள் நடந்து வருகின்றார்கள்.

விருத்தம் பாலேறும் விடையில்வரும் திரிகூடப் பெருமானார் பவனி காணக் காலேறும் காமனுக்காக் கையேறும்

படைப்ப வுஞ்சாய்க் கன்னிமார்கள் சேலேறுங் கலகவிழிக் கணைதீட்டிப் புருவநெடுஞ் சிலைகள் கோட்டி மாலேறப் பொருதும்என்று மணிச்சிலம்பு

முரசறைய வருகின்றாரே. (பாலேறு - பாலைப் போன்ற வெண்மையான ஏறு, கால் - காற்று, தென்றல். பவுஞ்சு - சேனை. சேல் - கெண்டை மால்ஏற - காம மயக்கம் ஏற. ஆடவரைப் பொருது, மாலேறச் செய்வதற்காக, விழிக்கணைகள்ைத் தீட்டி, புருவச் சிலைகளைக் கோட்டிச், சிலம்புகள் முரசறைய வருகின்றனர் கன்னிப் பெண்கள். இதனால், அவர்களுடைய பருவமும் எழிலும் வகந்த காலத்தன்மையும், நன்கு விளங்கும். கண்டவர் காமுற்று நலியும் பேரழகு உடையவர் அவர்கள் என்பதும் புலனாகும்) ura

5. கன்னியரின் பேச்சு (கண்ணிகள்) ஒரு மானைப் பிடித்து வந்த பெருமானாகிய குற்றால நாதரைத் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்ற ஒரு கோடி மான்களைப் போல ஒரு கோடி மடவார்கள் வந்தனர். அவர்களுள் அவனைப் பார்த்தவர்கள் தமக்குள் இவ்வாறாகப் பேசத் தொடங்குகின்றனர்: முப்புரி நூலணிந்திருக்கும்