உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:திருக்குற்றாலக் குறவஞ்சி-மூலமும் உரையும்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 திருக்குற்றாலக் குறவஞ்சி - மூலமும் உரையும்

வெடித்த கடலமுதை எடுத்து

வடிவுசெய்த மேனியாள் ஒரு வீமப் பாகம்பெற்ற காமப்

பாலுக்கொத்த சீனியாள். பிடித்த சுகந்தவல்லிக் கொடிபோல்

வசந்தவல்லி பெருக்கமே சத்தி பீடவாசர்திரிகூட ராசர் சித்தம்

உருக்குமே. 6

(காமத் துட்டன் - காமனாகிய துஷ்டன், அல்லது காமத்தை எழுப்பிக் கலகம் விளைவிக்கும் துஷ்டன். அவனுடைய அரண்மனை மன்மத பீடம். அதற்குள் வரவேற்கும் கதலி வாழைகள் போன்ற தொடைகள். துடிக்குளடங்கும் துடியுள்ள டங்கும் என்பதும் பாடம். நெறிபிடித்தல் என்பர். கொய்சுதல். இதனைக் கொசுவம் வைத்தல் என்பர்.)

‘வெடித்த கடலமுது’ எனக்கொண்டு, ‘கடலைக் கடைந்து பெற்ற கடலமுது எனவும் கொள்ளலாம். வடிவு உருவு. சீனி - சர்க்கரை, சத்திபீடம் அறுபத்து நான்கு எவை எவை என்பதனைத் தேவி புராணங்களுள் காண்க. இக்கண்ணிகள் வசந்தவல்லியின் லட்சணங்களைக் கேசாதி பாதமாக முறையே குறிப்பிட்டு வருணிப்பன. அந்த வருணனைகளின் நயத்தினைப் பொருளுணர்ந்து அறிந்து இன்புறுக. பெருக்கம் - செருக்கம் என்பதும் பாடம்; கர்வமுடன் விளங்குவது என்பது அதற்குப்பொருள்.

4. பந்தடி பயிலுதல்

சிவபெருமான் விளங்கிய மெய்யறிவினை உடையவர். அவருடைய திரிகூட நகரத்திலே மேலே சொல்லிய பேரழகினை உடையவளான வசந்தவல்லி என்பவள், தன் வீட்டினின்றும் வெளியேவந்து தோன்றினாள்."தாவித்தாவிக் குதிக்க வேண்டும் என்ற விளையாட்டு ஆர்வத்தினாலோ, அல்லது பணைத்த கொங்கைகள் பூரித்துள்ள பருவத்தின் குறும்பினாலோ, அவள் தன் தோழியருடன் பந்தடிக்கத் தொடங்கினாள். சங்கு வளைகள் விளங்கும் கைகள் சிவக்கும்