பக்கம்:திருக்குற்றாலக் குறவஞ்சி-மூலமும் உரையும்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 திருக்குற்றாலக் குறவஞ்சி - மூலமும் உரையும்

போட்டாரே! இவரைக் கண்டவுடன் இவருடைய இவ்வழகுப் பெருக்கங்களை எல்லாம் பார்க்கப் போனால் எங்கள் திருக்குற்றால நாதர் போலேயும் ஒவ்வொரு சமயங்களிலே அவர் செய்யும் மாயங்கள் எல்லாம் இருக்கின்றனவே? இந்தச் சித்தர்தாம் யாவரோ? இப்படி எண்ணி எண்ணி மயங்கினாள் வசந்தவல்லி, இராகம் - அடாணா தாளம் - ரூபகம் பல்லவி இந்தச் சித்தர் ஆரோ - வெகு விந்தைக் காரராக விடையிலேறி வந்தார் (இந்தச்)

சரணங்கள் நாகம் புயத்திற் கட்டி நஞ்சு கழுத்திற் கட்டிக் காகம் அணுகாமல் எங்கும் காடு கட்டிப் பாகந் தனிலொரு பெண் பச்சைக்கிளிபோல் வைத்து மோகம் பெற வொருபெண் முடியில் வைத்தார்.(இந்தச்) மெய்யிற் சிவப்பழகும் கையில் மழுவழகும் மையார் விழியார் கண்டால் மயங்காரோ? செய்ய சடையின் மேலே திங்கட் கொழுந்திருக்கப் பையை விரிக்கு தம்மா பாம்பு சும்மா. (இந்தச்) அருட்கண் பார்வை யாலென் அங்கந் தங்கமாக உருக்கிப் போட்டார் கண்ட உடனேதான் பெருக்கம் பார்க்கில் எங்கள் திருக்குற்றாலர்போலே இருக்கு திவர்செய் மாயம்ஒருக் காலே. (இந்தச்) (காடுகட்டுதல் - வேலி வளைத்துக் கட்டுதல், பச்சைக் கிளி - உமையம்மை. முடியில் வைத்த பெண் - கங்கை. மழு - மழுவாயுதம். பை - படம். அங்கம் தங்கமானது மோகத்தால் மேனி பசலை படர்ந்து பொன்னிறம் பெற்றது. பெருக்கம் பார்த்தல் - அனைத்தையும் ஒருசேர நோக்கிக் காணுதல். சும்மா - அடிக்கடி. 'அரிக்கண் பார்வையிலே அனங்கன்றங்கமாக’ என்றும் பாடம் - நெற்றிக்கண்ணால் பார்த்து மன்மதனை எரித்தவர் என்பது கருத்து)