பக்கம்:திருக்குற்றாலக் குறவஞ்சி-மூலமும் உரையும்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன் 61

"கங்கை நீரிலே பெருகு' என்றார். நிமலன் மலத்தால் பற்றப் படாதவன். பிரமை - மயக்கம்.)

25. கருமம் ஏதோ? j

இளந்தென்றலைப் போலே உல்லாசமாக உலாவரும் பூங்கொடியே பூங்கொடிக்குப் பூங்கொடி பேசுவதுபோல என்னிடம் பேசும்போதே நின்மேனியிற் படர்ந்து கொண் டிருக்கும் இப் பசலை நோயினையும் காண்பாயாக. உண்மையாகவே நீ பரமர்மீதில் ஆசை கொண்டு விட்டனை. உண்மையான பேரின்பத்தை நல்கும் குற்றால நாதராகிய நிலையான நம்பெருமான் உன்பால் இசைந்து கூடுமாறு செய்வதற்குரிய செயல்தான் யாதோ? அதனை நானும் அறியுமாறு எனக்குத் தெரிவிப்பாயாக

விருத்தம்

வசந்தஉல் லாசவல்லி

வல்லிக்கு வல்லி பேசிப் பசந்ததோர் பசப்பும் கண்டாய்

பரமர்மேல் ஆசைகெண்டாய் நிசந்தரும் திருக்குற் றால

நிரந்தர மூர்த்தி உன்பால் இசைந்திடக் கருமம் ஏதோ

இசையநீ இசைந்தி டாயே.

(வல்லிக்கு வல்லி பேசிப் பசந்தது அது வசந்த வல்லியின் காதலனைப் பற்றிய பேச்சாதலினால், பரமன் - இறைவன். நிசந்தரும் - உண்மையான இன்பந்தரும். நிரந்தரமூர்த்தி - பிறப்பு இறப்பு அற்ற நித்தியனான தலைவன். கருமம் - செயல். இசைய இசைத்திடல் - கேட்போர் சந்தேகங் கொள்ளாதவாறு அப்படியே ஒப்புக் கொள்ளும்படியாக உண்மையாகப் பேசுதல்.

26. வருத்திக் கூறுதல்!

முன்னாளிலே திரிபுரங்களைப் பற்றிக் கொண்ட பெரு நெருப்பினை, அது மேலும் பரவாமல் அவித்துச் சுதன்மன்,