உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:திருக்குற்றாலக் குறவஞ்சி-மூலமும் உரையும்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 திருக்குற்றாலக் குறவஞ்சி - மூலமும் உரையும்

போகின்ற ஏகாந்த சமயமே, அவரிடம் பேசுவதற்கு மிகவும் ஏற்ற சமயம் மைதீற்றிய அழகு விழியாளே! அவ்வேளை யிலே, என் பெருமயக்கத்தை நீ அவரிடம் எடுத்துச் சொல்லி, அவருடைய கொன்றை மாலையினை வாங்கிவருவாயாக

இராகம் - பியாகடை தாளம் - ஆதி

- கண்ணிகள் திரிகூட ராசருக்குத் திருவனந்தல் முதலாகத்

தினமும் ஒன்பதுகாலம் கொலுவிற் சகியே! பெரிதான அபிஷேகம் ஏழு காலமும் ஒருவர்

பேசுவதற்குச் சமயம் அல்ல கண்டாய் சகியே! வருநாளி லொருமூன்று திருநாளும் வசந்தனும்

மாதவழி வருடவழிச் சிறப்பும் சகியே! ஒருநாளுக் கொருநாளில் வியனாகக் குழல்மொழிப்பெண்

உகந்திருக்கும் கொலுவேளை கண்டாய் சகியே! 5 பெத்தரிக்கம் மிகுந்ததிருக் குற்றால நாதலிங்கர்

பெருங்கொலுவிற் சமயமறி யாமற் சகியே! சித்தரொடு தேவகணம் சிவகணங்கள் தடைசெய்யத்

திருவாசற் கடைநிற்பாற் சிலபேர் சகியே! அத்தலையில் கடந்தவர்கள் நந்திபிரம் படிக்கொதுங்கி

ஆட்கொண்டார் குறட்டில் நிற்பார் சகியே! மைக்கருங்கண் மாதர்விட்ட வண்டுகளும் கிள்ளைகளும் வாசல்தொறும் காத்திருக்கும் கண்டாய் சகியே! கோலமகு டாகமசங்கரவிசுவநாதனருள்

குற்றாலச் சிவராம நம்பிசெயும் சகியே! பாலாறு நெய்யாறாய் அபிஷேக நைவேத்யம் - பணிமாறு காலமுங்கொண்டருளிச்சகியே! 10 நாலுமறைப் பழம்பாட்டும் மூவர்சொன்ன திருப்பாட்டும்

நாலுகவிப் புலவர்.புதுப் பாட்டுஞ் சகியே! நீலகண்டர் குற்றாலர் கொண்டருளும் நிறைகொலுவில் நீக்கமிலை எல்லோர்க்கும் பொதுக்காண் சகியே!