உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:திருக்குற்றாலக் குறவஞ்சி-மூலமும் உரையும்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன் - 75

குலுக்கமும், கண்களிலே ஒரு சிமிட்டும், வெளியிலே ஒரு பகட்டுமாக, உருவசி அரம்பையாகிய தேவமாதர்களின் கருவமும் அடங்குமாறும், அவன் முறுவலிலே தோன்றும் குறும்புத்தனத்தால் முனிவர்களும் கர்வம் அடங்குமாறும், அவள் சமதையாகப் பேசும் பேச்சினால் சபையெல்லாம் பேச்சு அவிந்து அடங்குமாறும், வானியங்கு முனிவர்களும் அவள் கடைக்கண் வீச்சினால் தம் செயலடங்குமாறும், கொட்டிய உடுக்கு, கோடாங்கிக்குறி முதலியவற்றுடன், மட்டிலாத பிறவகைக் குறிகளையும் தன் கட்டுப் பாட்டினாலே தனக்கு வசமாக அடக்கிக் கொண்ட வளாகச்,

சலவைசேர் மருங்கிற் சாத்திய கூடையும் வலதுகைப் பிடித்த மாத்திரைக் கோலும் மொழிக்கொரு பசப்பும் முலைக்கொரு குலுக்கும் விழிக்கொரு சிமிட்டும் வெளிக்கொரு பகட்டுமாய் உருவசி அரம்பை கருவமும் அடங்க 25 முறுவலின் குறும்பால் முனிவரும் அடங்கச் சமனிக்கும் உரையால் சபையெலாம் அடங்கக் கமனிக்கு மவரும் கடைக்கணால் அடங்கக் கொட்டிய உடுக்கோ டாங்கிக் குறிமுதல் மட்டிலாக் குறிகளும் கட்டினால் அடக்கிக் 30 (கூடை - குறிசொல்வோர் வைத்திருக்கும் மணிக்கூடை. மாத்திரைக் கோல் - மந்திரக்கோல். முறுவலின் குறும்பு - புன் சிரிப்பிலே வெளிப்படும் குறும்பு. கமணிக்குமவர் - வானியங்கு முனிவர், அந்தரசாரிகள்.) -

கொங்கணம் ஆரியம் குச்சலம் ஆகிய நாடுகளிலும் செங்கையிலே பிடித்துள்ள தன் மாத்திரைக் கோலினாற் செங்கோல் செலுத்தியபின், கன்னடம் தெலுங்கு கலிங்க நாடுகளிலும் தென்னவரின் தமிழினாலே வெற்றிக்கொடி நாட்டியவளாக, ஆடவர்களுக்கு வலதுகையினைப் பார்த்தும், இனிய முறுவலினையுடைய பெண்களுக்கு இடதுகையினைப் பார்த்தும், கழிந்த காலத்திலே நிகழ்ந்து போனவைகளைப்