பக்கம்:திருவருட்பாச் சிந்தனை.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

127


படார்கள். அரசர்களாலும் தெய்வங்களாலும் அவமதிக்கப்படார்கள். காருணியமுள்ள சமுசாரிகளது விளைநிலத்தில் பிரயாசையில்லாமலே விளைவு மேன்மேலும் உண்டாகும் - வியாபாரத்தில் தடையில்லாமல் லாபங்களும், உத்தியோகத்திற் கெடுதியில்லாத மேன்மையும் உண்டாகும் - சுற்றங்களாலும் துஷட ஜந்துக்களாலும் துஷ்டப் பசாசுகளாலும் துஷ்ட தெய்வங்களாலும் பயஞ்செய்யப்படார்கள் - சீவகாருணியமுள்ள சமுசாரிகளுக்கு எப்படிப்பட்ட ஆபத்துகளும் அஜாக்கிரதையினாலும் ஊழ்வகையினாலும் சத்தியமாக வாரா. பசித்தவர்களுக்குப் பசியாற்றுவித்து இன்பத்தை உண்டுபண்ணுகின்ற சீவகாருணிய ஒழுக்கமாகிய மேலான விரதமானது தேவர்கள், மனிதர்கள், பிரமச்சாரிகள், சமுசாரிகள், தவசிகள், சந்நியாசிகள், ஆண் சாதியர், பெண்சாதியர் வார்த்திபர், வாலிபர், உயர்ந்தோர், தாழ்ந்தோர் முதலிய யாவராலும் அவசியம் செய்யத் தக்கதென்பது கடவுளாணையென்றறிய வேண்டும்.

பசித்தவர்க்குப் பசியை நீக்குகின்ற விஷயத்தில் புருஷனைப் பெண்சாதி தடுத்தாலும், பெண்சாதியைப் புருஷன் தடுத்தாலும், பிள்ளைகளைத் தந்தை தடுத்தாலும், தந்தையைப் பிள்ளைகள் தடுத்தாலும் சீஷரை ஆசாரியர் தடுத்தாலும், அடியாரை ஆண்டவன் தடுத்தாலும், குடிகளை அரசன் தடுத்தாலும் அந்தத் தடைகளால் சிறிதுந் தடைபடாமல் அவரவர் செய்த நன்மை தீமைகள் அவரவரைச் சேருமல்லது வேறிடத்திற் போகா வென்பதை உண்மையாக நம்பிச் சீவகாருணிய ஒழுக்கத்தை நடத்த வேண்டுமென்றும் அறிய வேண்டும. உள்ளபடி பசியால் வருந்துகின்ற சீவர்களுக்கு