பக்கம்:திருவருட்பாச் சிந்தனை.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

158


நோக்கி வள்ளலார் வேண்டிய விண்ணப்பம் இடம் பெற்றுள்ளது.

வெளியாய் வெளிக்குள் வெளியாய் ஒளிக்குள்
ஒளியாகி நின்ற வுனை

(1973)

எனவரும் வள்ளலார் அருளிய சிவநேச வெண்பாத் தொடர்,

வெளியில் வெளியில் வெளியன் வெளியில்
ஒளியில் ஒளியில் ஒளியன்

(கண்ணி 33)

என உமாபதி சிவம் அருளிய நெஞ்சுவிடுதூதில் உள்ள தொடரினை நினைவுபடுத்துதல் காணலாம்.

உன்னால் எனக்காவது உண்டதுநீ கண்டதுவே
என்னாலுனக் காவ தேதுளது

(1984)

எனவரும் சிவநேச வெண்பாத் தொடர்,

பொன்னாற் பிரயோசனம் பொன்படைத்
தார்க்குண்டு பொன்படைத்தோன்
தன்னாற் பிர யோசனம் பொன்னுக்கங்
கேதுண்டு

(திருக்காளத்தி - 2)

எனவரும் பட்டினத்தடிகள் பாடற்றொடரை நினவுை கூரும் முறையில் அமைந்திருப்பது காணலாம்.

கூகா என அடுத்தோர் கூடியழாத வண்ணம்
சாகா வரமெனக்கே தந்திட்டான்

(5510)

எனவரும் வள்ளலார் வாய்மொழி,

'கூகா என என்கிளை கூடியழப்
போகா வகை மெய்ப்பொருள் பேசியவா'

(கந்தரநுபூதி - 11)