பக்கம்:திருவருட்பாச் சிந்தனை.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

163



தொடியுலாமென் கைமட மாதர்பால் நினக்காகத் தூது சென்றும்
மிடியிலா மனைகடொறு மிரந்திட்டு முழன்றமையால் விளங்கு மாறே

எனச் சிவப்பிரகாசர் சுந்தரரைப் போற்றும் நால்வர் நான்மணிமாலைப் பாடலின் பொருள் விளக்கமாக அமைந்துள்ளமை காணலாம்.

திருவாசகத்துக்குப் பொருள் யாது என வினவிய அன்பர்களைத் தில்லைக் கோயிலுக்குள் அழைத்துக் கொண்டு சென்று இதற்குப் பொருளாவார் தில்லைச் சிற்றம்பலவரே எனக் கூறித் தேடுகின்ற ஆனந்தச் சிற்சபையிற் சின்மயமாய் ஆடுகின்ற சேவடியாகிய அருள்வெளியில் கலந்தவர் மணிவாசகப்பெருமான். அவரைப் போற்றுவதாக அமைந்தது,

பெருந்துறை புகுந்து பேரின்பவெள்ளம்
மூழ்கிய புனிதன் மொழிந்த வாசகமே
வாசக மதற்கு வாச்சியந்
தூசக லல்குல்வேய்த் தோளிடத் தவனே

(8)

எனவரும் நால்வர் நான் மணிமாலைப் பாடலாகும். வாசகம் - சொல், வாச்சியம் - பொருள். வேய்த் தோளிடத்தவன் - பசிய மூங்கில் போலும் தோளினை யுடையாளாகிய உமையை யிடப்பாகத்திற் கொண்டவனாகிய சிவபெருமான். இதன் கருத்தினை அடியொற்றியது,

வருமொழிசெய் மாணிக்க வாசகநின் வாசகத்தில்
ஒருமொழியே என்னையும்என் உடையனையும் ஒன்றுவித்துத்