பக்கம்:திருவருட்பாச் சிந்தனை.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

177

ஐவகை யெனும் பூதமாதியை வகுத்ததனுள்
அசரசர பேதமான
யாவையும் வகுத்து நல்லறிவையும் வகுத்துமறை
யாதி நூலையும் வகுத்துச்
சைவமுதலாம் அளவில் சமயமும் வகுத்துமேற்
சமயங் கடந்த மோன சமரசம் வகுத்த நீ.

(சின்மயானந்த குரு-4)

எனத் தாயுமான அடிகள் ஆலமர்செல்வனாகிய குருமூர்த்தியைப் பரவிப் போற்றும் பாடலால் இனிது புலனாம்.

இங்ஙனம் எல்லாச் சமயங்களையும் இகலின்றி ஒப்ப மதித்து ஏணிப்படி நெறிகளாகத் தழுவிக் கொள்ளும் பொதுமையுணர்வு சைவ சமயத்தார் மேற்கொண்டுள்ள சன்மார்க்க நெறியிலேயே தொன்று தொட்டு நிலைபெற்று வந்துள்ளது. இந்நுட்பம் சைவத் திருமுறைகளையும் சைவசித்தாந்த சாத்திரங்களையும் சைவ இலக்கியங்கள் பிறவற்றையும் கூர்ந்து நோக்குவார்க்கு இனிது புலனாகும்.

"எங்கேனும் யாதாகிப் பிறந்திடினும் தன்னடியார்க்கு
இங்கேஎன் றருள்புரியும் எம்பெருமான்"

(2–40–6)

என ஆளுடைய பிள்ளையாரும்,

"ஆறுசமயத்து அவரவரைத்தேற்றும் தகையன ...
... ... ... இன்னம்பரான் இணையடியே"

(4-100-எ)

‘ஏணிப்படி நெறி இட்டுக் கொடுப்பன்’

(4—92--16)

என ஆளுடைய அரசரும்,