பக்கம்:திருவருட்பாச் சிந்தனை.pdf/205

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

184

 சமயத்திற்குரிய அடையாளம் இருக்கிறது? (ஒன்றுமில்லை) எல்லாம் ஞான வெளியே என உணர்ந்து எல்லாச் சமயத்தோர்களும் தில்லைப் பொது மன்றினை வணங்கிப் போற்றுகின்றார்கள். கல்லின் தன்மையதாகிய நெஞ்சத்தையுடைய எனக்குக் கூட அம்மன்றினைக் கண்டவுடன் வீடுபேற்றின்பமாகிய பேரானந்தத்தினை நுகரும் நிலையுண்டாகிறது எனத் தாயுமானவடிகள் சைவ சமயத்திலுள்ள ஞான நன்னெறியாகிய சன்மார்க்கத்தின் சிறப்பினையும் அந்நெறியின் பயனாக எல்லாச் சமயத்தாரும் தம்முள் இகலின்றி ஆன்மநேய ஒருமைப் பாட்டுணர்வினராய்ச் சமயங்கடந்த தனிமுதற் பொருளை வணங்குதற்குரிய பொதுமை வாய்ந்த திருக்கோயிலாகத் தில்லையம்பலம் - திகழவும், இதனாற் பயன் கொள்ள முயலாத ஏனையோரின் இரங்கத்தக்க நிலையினையும் எண்ணி வியந்து கூறும் முறையில் அமைந்தன:

செப்பரிய சமயநெறி யெல்லாந் தந்தம்
தெய்வமே தெய்வமென்னும் செயற்கை யான
அப்பரி சாளரும் அஃதே பிடித்தாவிப்பால்
அடுத்த அந்நூல்களும் விரித்தே அநுமானாதி
ஒப்பவிரித் துரைப்பர் இங்ங்ண் பொய் மெய் யென்ன
ஒன்றிலை ஒன்றெனப் பார்ப்ப தொவ்வா தார்க்கும்
இப்பரிசாஞ் சமயமுமாய் அல்லவாகி
யாது சமயமும் வணங்கும் இயல்பதாகி

(தாயுமானவர்-ஆகாரபுவனம்-சிதம்பர ரகசியம்-9)

இயல்பென்றுந் திரியாமல் இயம மாதி
எண்குணமும் காட்டியன் பால் இன்பமாகிப்
பயனருளப் பொருள்கள் பரிவாரமாகிப்
பண்புறவும் செளபான பக்ஷங்காட்டி