பக்கம்:திருவருட்பாச் சிந்தனை.pdf/215

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

194


ஞான சபையிலே உலக நடனமும் அதற்கு மேற்பட்ட நடனமுமாம் பரமநடனத்தைக் குகேசன் ஆடியருள்கின்றான் (தகராலய-ரகசியம் 14) நில முதல் நாதமீறாகிய முப்பத்தாறு தத்துவங்களும் சகத் (பிருதிவி) முதல் மகத் இறுவாய்க் கிடந்த ஏழிலும் அடங்குதலின் அவை பூ, (நிலம்) உதகம், (நீர்) ஆரல், (நெருப்பு) உயிர் (வளி) வியோமம், (ஆகாயம்) அகந்தை (அகங்காரம்) மகத் (பிரகிருதி) என்னும் ஆவரணங்கள் (மறைப்புத் திரைகள்) ஆகக் கூறப்பட்டன” பூத தன்மாத்திரை ஐந்தும், அகங்காரம், மகத் என்னும் இரண்டுமாகிய ஏழு கிரந்திகட்கு (முடிச்சுகட்கு) ஆதாரமாயுள்ள குண தத்துவ காரணத்தை' எனவரும் மிருகேந்திரவுரை சத்தாவரண விவரத்தை யுணர்த்துகின்றது. ஆவரணம்-மறைவு, அதுவே திரை யெனவும்படும்.

“சத்திய சங்கற்பன் குணசொரூபமான திரைச்சீலையினால் தன்னை மறைத்துக் கொண்டு கன்ம பலனை அனுபவிப்பவன்போ லிருக்கின்றனன்” - என மைத்தி ராயணியவுபநிடதமும், “இவன் எல்லாப்பூதங்களகத்து மறைந்து பிரகாசியா திருக்கின்றனன் - எனச் கடோபநிடதமும் கூறுகின்றன.

“விறகிற்றீயினன் பாலிற்படு நெய்போல்
மறைய நின்றுளன் மாமணிச் சோதியான்”

என்பது அப்பர் அருளிச் செயல்.

முன்னர்க் கூறப்பட்ட ஆவரணங்களாகிய ஏழு திரைகளையும் நீக்கித் தூய்மை மிகுந்த மெய்ஞ்ஞானப் பார்வை கெடாதாருடைய ஞான நேத்திரமே ஆகாசங்களின் மேம்பட்ட சிதம்பர குகேசனது நடனத்தைத் தரிசிக்கும் எனவும், ஆணவ விருளின் மறைப்புண்டுகிடப்