பக்கம்:திருவருட்பாச் சிந்தனை.pdf/219

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

198


மரணமிலாப் பெருவாழ்வாகிய பேரின்ப நிலையைப் பெறுதற்குரிய சிறந்த சாதனமாம் என்பதும், அருட் பிரகாச அடிகளார் கண்ட சமரச சுத்த சன்மார்க்கத்தின் தலைசிறந்த கொள்கைகளாகும். இக்கொள்கைகள் வடலூர் வள்ளலார் அருளிய திருவருட்பா ஐந்து திரு முறைகளிலும் பொதுவாகவும், ஆறாம் திருமுறையிலும், சன்மார்க்க சங்க விண்ணப்பங்கள், சீவகாருண்ய ஒழுக்கம் முதலிய உரைநடை நூல்களிலும் சிறப்பாகவும் விளக்கப் பெற்றுள்ளன:

அருள்நிலை விளங்குசிற் றம்பலம் எனுஞ்சிவ
சுகாதீத வெளி நடுவிலே
அண்ட பகிரண்ட கோடிகளும் சராசரம்
அனைத்தும் அவை ஆக்கல் முதலாம்
பொருள் நிலைச் சத்தரொடு சத்திக ளநந்தமும்
பொற்பொடு விளங்கி ஓங்கப்
புறப்புறம் அகப்புறம் புறம்அகம் இவற்றின்மேல்
பூரணா கார மாகித்
தெருள் நிலைச் சச்சிதானந்த கிரணாதிகள்
சிறப்பமுதல் அந்தம் இன்றித்
திகழ்கின்ற மெய்ஞ்ஞான சித்திஅநு பவநிலை
தெளிந்திட வயங்கு சுடரே
சுருள்நிலைக் குழலம்மை ஆனந்த வல்லிசிவ
சுந்தரிக் கினிய துணையே
சுத்த சிவ சன்மார்க்க நிதியே அருட்பெருஞ்
சோதி நடராச பதியே.

(திருவருட்பா 3651)

எனவரும் திருவருட்பா - சமயவேறுபாடின்றி உலக மக்கள் எல்லோராலும் வழிபடப் பெறும் திருச்சிற்றம்பல மென்னும் சிதாகாசப் பெரு வெளியினடுவே அருட்பெருஞ்