பக்கம்:திருவருட்பாச் சிந்தனை.pdf/255

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

234


எனவரும் பாடலில் ஒளவையார் தெளிவாகக் குறித்துள்ளார்.

கொலையும் புலையுந் தவிர்ந்த நன்மக்களை அகவினத்தார் என்றும், கொலையும் புலையும் முதலான குற்றம புரிவோரைப் புறவினத்தார் என்றும் இருதிறத்தினராக வள்ளலார் பிரித்துக் கூறிய பகுப்பும் மக்களது உயிர்ப்பண்பு பற்றியமைந்த உயர்வு தாழ்வு பற்றியதேயன்றி வினைவயத்தால் வரும் பிறப்பு வேற்றுமை பற்றியதன்றென வுணர்தல் வேண்டும்.

இவ்வாறு தெய்வப் புலவர் திருவள்ளுவர் திருமூலர் முதலிய அருளாசிரியர் முதல் சென்ற நூற்றாண்டில் தோன்றிய அருட்பிரகாச வள்ளலார் வரை வாழையடி வாழையாக வந்த செந்தமிழ்ச் சான்றோர் அனைவரும் சாதிப் பகுப்பின் பொருளற்ற தன்மையினை எடுத்துரைத்து விளக்கியிருக்கவும், அதனை உளங்கொள்ளாமல் உலக மக்களிற் பெரும்பாலார் சாதி இன வேற்றுமையினை உண்மையென நம்பி உலக மக்களது ஒருமைப் பாட்டுணர்வுக்குத் தடையாக அறியாமையிருளில் அகப்பட்டு அவலமுறுகின்றார்களே என வருந்திய பாவேந்தர் பாரதிதாசனார், அறிவியற்கலைகள் பல வளர்ந்த இக் காலத்திலும் இவ்வுலகம் இருட்டறையில்தான் இருக் கின்றது என்னுங்கருத்தில்,

'இருட்டறையில் உள்ளதடா உலகம், சாதி
இருக்கின்றது என்பானும் இருக்கின்றானே'

என இரங்கிப் பாடியுள்ளமை இங்கு நினைக்கத் தகுவதாகும். இக்காலத்தில் இந்திய நாட்டின் ஒற்றுமையுணர்வு நிலைபெறுதல் வேண்டும் என்னும் நோக்குடன் சாதி மதத்தின் வேறுபாடற்ற தேசிய ஒருமைப் பாட்டினை