பக்கம்:திருவருட்பாச் சிந்தனை.pdf/274

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

253


எனவரும் புறப்பாடல் தவத்தின் வெற்றியைக் குறித்த தாபத வாகை என்னும் துறையிலமைந்ததாகும்.

'மூங்கிலிடத்தேயுடைய நெடிய மலையினின்று விழும் அருவி நீரிற் குளித்துக் காட்டுயானை கொணர்ந்த விறகினால் வேள்விக் குண்டத்தில் செந்தீயை வளர்த்து முதுகின் புறத்தே தாழ்ந்த தனது சடையைப் புலரும்படி செய்து கொண்டிருக்கிற இத் தவச்செல்வன் முற் பருவத்தில் ஒவியம் போலும் அழகினையுடைய தன் வீட்டின் கண்ணே பாவை போலும் வளையணிந்த மகளிருடைய அணிகலன்கள் கழலுமாறு அன்பு மீதுார உபசரிக்கப் பட்டவன் என்பதனைக் கண்டுகொண்டேம்' என்பது இப்பாடலின் பொருளாகும்.

இப்பொழுது மலையருவியில் நீராடிக் காட்டு யானை தந்த விறகினால் வேள்வி செய்து தன் புறத்தே தாழ்ந்த ஈரச்சடை புலரும்படி தவநிலையில் இருப்போனாகிய இவன், முன்பு தன் இல்லத்திலே காதல் மகளிர் காமுறப் பேரழகனாய் வாழ்ந்தவன் என்பதனை இப்பொழுது கண்டு கொண்டோம் என வியந்து போற்றுவதாக அமைந்தது மாற்பித்தியார் பாடிய இப்புறப்பாடலாகும்.

'இம்மையின்பம் நல்கும் இவ்வுலகியல் வாழ்வையும் வீடு பேற்றின்பத்தை நல்கும் தவ வாழ்வையும் சீர்துாக்கிப் பார்த்தால் தவ வாழ்வை நோக்க இவ்வுலகியல் வாழ்வு வெண் சிறுகடுகின் அளவு கூட நிறையில் நில்லாது. ஆதலால் பேரின்பமாகிய வீடுபேற்றில் விருப்பமுடையோர் இவ்வுலகியல் வாழ்வைக் கைவிட்டுத் தவவாழ்வை மேற்கொண்டனர். இவ்வாறு எல்லாப் பறறுக்களையும் விட்டுத் துறவடைந்தவர்களை எல்லாச் செல்வத்துக்கும் தெய்வமாகிய திருமகள்விட்டு நீங்க மாட்டாள்' எனத் தவத்தின் சிறப்பினை விளக்குவதாக அமைந்தது,