பக்கம்:திருவருட்பாச் சிந்தனை.pdf/305

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

284


ஏற்றாலே இழிவெனநீர் நினையாதீர் உலகீர்
     எந்தையருட் பெருஞ்சோதி யிறைவனைச்சார் வீரே

(திருவருட்பா-5450)

ஆராலும் அறிந்து கொளற்கரிய பெரும் பொருளே
     அம்மே! என் அப்பா, என் ஐயா, என் அரசே
காராலும் கனலாலும் காற்றாலும் ககனக்
     கலையாலும் கதிராலும் கடலாலும் கடல்சூழ்
பாராலும் படையாலும் பிறவாலும் தடுக்கப்
     படுதலிலாத் தனி வடிவம் எனக்களித்தபதியே
சீராலும், குணத்தாலும் சிறந்தவர் சேர் ஞான
     சித்திபுரத்தமுதே என்நித்திரை தீர்ந்துதவே

(௸ 4636)

மன்னுகின்ற பொன் வடிவும் மந்திரமாம் வடிவும்
     வான்வடிவும் கொடுத்தெனக்கு மணிமுடியுஞ்சூட்டிப்
பன்னுகின்ற தொழில் ஐந்தும் செய்திடவே பணித்து
     பண்புற என் அகம்புறமும விளங்குகின்ற பதியே
உன்னுகின்ற தோறும் எனக்குள்ளம் எலாம் இனித்தே
     ஊறுகின்ற தெள்ளமுதே ஒரு தனிப் பேர்ஒளியே
மின்னுகின்ற மணிமன்றில் விளங்கு நடத்தரசே
     மெய்யும் அணிந்தருள்வோய் என் பொய்யும் அணிந்தருளே

(௸ 4150)

ஊன உடம்பே ஒளி உடம்பாய் ஓங்கிநிற்க
ஞான அமுதெனக்கு நல்கியதே - வானப்
பொருட் பெருஞ்சோதி பொதுவில் விளங்கும்
அருட்பெருஞ் சோதியது.

(4823)

சுத்த வடிவும், சுக வடிவும் ஓங்கார
நித்த வடிவும் நிறைந்தோங்கு - சித்தெனுமோர்